உள்நாடு

ஹிஜாப் உடை மூலம் இஸ்லாம் பெண்களின் மரியாதையினையும் கண்ணியத்தினையும் பாதுகாக்கின்றது.. -ஈரான் ஜனாதிபதியின் பாரியார் ஜெமிலியா ஆலமுல்ஹுதா

கண்ணியம், அறநெறிகள் மற்றும் நெறிமுறைகள் ஓர் மத பின்னணியுடன் ஓர் பண்புள்ள மனிதனை உருவாக்குகிறது. குறிப்பாக ஹிஜாப் உடை மூலம் இஸ்லாம் பெண்களின் மரியாதையினையும் கண்ணியத்தினையும் பாதுகாக்கின்றது என ஈரான் ஜனாதிபதியின் பாரியார் ஜெமிலியா ஆலமுல்ஹுதா தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்தின் கலாச்சார மத்திய நிலையத்தில் தனது ஒழுக்க விழுமியங்களால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற இடம்பெற்ற ஓர் சாதாரண ஈரானிய பாரம்பரிய பெண்ணுடனான உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

கல்வியின் முக்கியத்துவம் அத்தோடு கல்வி எவ்வாறு மனிதனின் ஆன்மீக விருத்தி மற்றும் பகுத்தறிவினை மேம்படுத்துகின்றது என்பதனை வலியுறுத்திக் காட்டினார்.

அத்தோடு ஒரு குடும்ப முன்னேற்றத்திற்கு தாய் எப்படி முக்கியமானவர் என்பதை விவரித்தார். ஈரானிய மாதிரி தாய் எவ்வாறு மேற்கத்திய மதிப்பீட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றார் என்பதனை தெளிவுபடுத்திக் காட்டினார்.

இலங்கையைப் போலவே, குடும்பத்தில் தாயின் குணம் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும் அனைத்து ஒழுக்க நெறிகளுக்கும் ஒப்பற்ற பங்கு வகிக்கின்றது அதாதோடு ஓர் தாய் குழந்தைகளை எப்படி கவனித்து வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கிறாள் என்பதை விளக்கினார்.

குறிப்பாக, இஸ்லாமிய சமுதாயத்தில், இஸ்லாம் பெண்களை ஹிஜாப் மற்றும் மரியாதையான உடையுடன் ஏன் பாதுகாக்கிறது மற்றும் மதத்திலிருந்து அவள் எவ்வாறு பாதுகாக்கிறாள் என்பதை விளக்கினார்.

அத்தோடு, இஸ்லாம் அவளை ஒரு மரியாதையான மற்றும் பொறுப்பான பெண்ணாக குடும்பத்திலும் சமூகத்திலும் உயர்ந்த நிலையை அடைய அனுமதிக்கின்றது. இது இஸ்லாத்தின் பாதுகாப்பு மற்றும் அதிக நன்மைகளுடன் ஒரு தாயைப் பராமரிப்பதாகும் என தெரிவித்தார். நவீன சமுதாயத்தில் ஈரான் எவ்வாறு நல்ல நடத்தை மற்றும் மரியாதையான உடையுடன் முன்வருகிறது என்பதை அவர் விளக்கினார். ஈரானியப் பெண், மதப் பின்னணியுடன் உலகில் இன்று உயர்ந்த நிலையை அடைந்திருப்பதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *