பிரித்தானிய உயர் ஸ்தானிக கலந்துரையாடல்..!
பிரித்தானிய உயர் ஸ்தானிக தூதரகத்தின் அனுசரணையில், ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மினிஸ்டர் அறக்கட்டளையூடாக இடம்பெறும் வேலைத்திட்டங்கள் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பான கலந்துரையாடல், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மற்றும் பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் துறை செயலாளர் டாம் இடையே (24) இடம்பெற்றது.
இதன் போது, அரசாங்கம் தேர்தல் முறை மாற்றத்திற்கான கேபினட் தீர்மானமொன்றை எடுத்துள்ளது. அவ்வாறான மாற்றங்கள் வரும் போது தமிழ், முஸ்லீம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் அது பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். அதனால் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வென்பதை தாண்டி, பிரச்சினைகள் மென்மேலும் சிக்கலானதாக மாற்றமடையும். முன்வரும் காலத்தில் சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் மிக பெரிய ஜனநாயக சவாலாகவும் இது காணப்படுகின்றது. என்பதையும்,
மலையக அரசியலில், இளைஞர் யுவதிகளுக்கு பிரவேசிப்பதற்கு காணப்படும் இடைவெளி மிக குறைவாகவே உள்ளது. கடந்த பல தசாப்தங்களாக குடும்ப ஆட்சியின் அதிகாரமே கையோங்கியுள்ளது. இந்நிலைமை, மலையக சமூகத்தின் ஜனநாயக செயற்பாட்டிற்க்கான மிக பெரும் சவாலாகவும் உள்ளது. அரசியல் இஸ்தீர தன்மையை மற்றும் ஜனநாயக மேன்பாட்டை வலியுறுத்துகின்ற தங்களது செயற்பாடுகளின் மூலம், மலையக இளைஞர் யுவதிகளுக்கு சுதந்திரமாக அரசியல் பிரவேசத்தை மேற்கொள்வதற்கான இடைவெளியை ஏற்படுத்திக்கொடுங்கள். அதற்கான வழிமுறைகளை முன்னெடுங்கள் என்பதனையும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் இச்சந்திப்பில் வலியுறுத்தினார்.