களுத்துறை முஸ்லிம் பாலிகா, முஸ்லிம் மத்திய கல்லூரிகளுக்கு மூன்று மாடிக் கட்டிடங்கள்..! -அமைச்சர் அலி சப்ரி வேண்டுகோளில் மேல் மாகாண ஆளுநர் உறுதி
2024 .04 .26 ஆம் திகதி கௌரவ வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்ளின் வெண்டுகோளின் பேரில் மேல் மாகாண ஆளுநர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக அவர்கள் களுத்துறை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி ஆகியவற்றிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு பாடசாலைகளின் நீண்ட கால தேவைகளையும், குறைபாடுகளையும் கண்டறிந்தனர். இதில் உயர்தர கல்வி நடவடிக்கைகளுக்கான வசதிகளைப் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையும் பாடசாலை சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டது. அப்போது மேல் மாகாண ஆளுநர் அவர்கள் இரண்டு பாடசாலைகளுக்கும் சுமார் 50 மில்லியன் ரூபா வீதம் நிதி ஒதிக்கித் தருவதாக வாக்குறுதியளித்ததோடு பாடசாலைகளின் வளங்களையும் மேற்பார்வை செய்தார். அதன் படி களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு விஞ்சான ஆய்வு கூடத்துடனான மூன்று மாடிக்கட்டடம் ஒன்றும் களுத்துறை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்திற்கு கேட்போர் கூடத்துடனான மூன்று மாடிக்கட்டடம் ஒன்றும் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். நிகழ்வுகளில் மேல் மாகாண கல்வி அமைச்சின் மேலதிகப்ப பணிப்பளார் திரு மஹிந்த விஜேயதுங்க, மேல்மாகாண திட்டமிடல் பணிப்பளார் திரு லக்மால், களுத்துறை வலயக் கல்விப் பணிப்பளார் திரு விக்ரமராச்சி, கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு அபயநாயக, இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபன முன்னால் தலைவர் திரு உவைஸ் முஹம்மத் முன்னாள் நகர பிதா திரு அமீர் நசீர், முன்னாள் நகர சபை உறுப்பினர் ஹிஷாம் சுஹைல், களுத்துறை மாநகர ஆணையாளர் திருமதி பியுமாலி, பாடசாலை அதிபர்களாக திரு நப்ராஸ் நிலார் மற்றும் திருமதி சாஜிதா உட்பட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
(படங்கள் – பீ எம் முக்தார் பேருவளை)