Monday, August 11, 2025
Latest:
உள்நாடு

சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்..! தர்கா நகரில் நாளை நூல் அறிமுக விழா..!

பன்னூலாசிரியர் அஸ்ரப் சிஹாப்தீனின் கவிதைத் தொகுதியான “சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்“ நூல் அறிமுக நிகழ்வு நாளை  28/04/2023 ஞாயிற்றுக்கிழமை தர்கா நகர் ஸாஹிறா கல்லூரி மண்டபத்தில் பேருவளைப் பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்தின் அனுசணையிலும் ஏற்பாட்டிலும் நடைபெறவுளள்து. தமிமாமணி அஸ்ரப் சிஹாப்தீன் கவிதை,கட்டுரை, நாடகம், சிறுகதை, பத்தி எழுத்து, சிறுவர் இலக்கியம், நாவல், மொழி பெயர்ப்பு என்று இலக்கியத்தின் எல்லாத்துறைகளிலும் பயணித்து பழுத்த அனுபவத்தை சேமித்திருக்கும் ஒரு பிடிவாதக்கார இலக்கியவாதி. தேர்ந்த வாசிப்பும், தொடரான எழுத்தும் அவரை எழுத்துலக மார்கண்டேயானாக உருவாக்கியுள்ளது. இவரது எழுத்தின் மேதாவிலாசத்திற்க்கு அடையாளமாக இலங்கை அரசின் உயர்விருதான சாஹித்திய மண்டல பரிசினை நான்கு தடவைகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும், தட்டிக்கொடுப்பதிலும் முன்னின்று செயற்படும் தமிழ்மாமணி அஸ்ரப் சிஹாப்தீன் இன்னும் பல நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்கு தரவேண்டுமென அருவிக்கரை வாழ்த்துகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *