கற்பிட்டி அல் அக்ஸா பாடசாலைக்கு பழைய மாணவர்களால் கூட்ட மண்டபத்திற்கான ஒலி அமைப்பு, பின்னணி திரைசீலை கையளிப்பு..!
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட பிரதான கூட்ட மண்டபத்திற்கான ஒலி அமைப்பு மற்றும் மேடையின் பின்னணி திரைச்சீலை என்பவற்றை பாடசாலையின் பழைய மாணவர்களான மிலேனியம் 2000 சாதாரண தர மாணவர்களின் முழு முயற்சியினால் வழங்கப்பட்டுள்ளது.
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.என்.எம் நஸ்றீன் மற்றும் எஸ்.எப் சாஜினாஸ் தலைமையில் நடைபெற்ற மிலேனியம் 2000 சாதரண தர மாணவர்களின் உபகரணங்கள் மற்றும் திரைச்சீலை கையளிக்கும் வைபவத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் , பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பாடசாலையின் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் குறித்த மிலேனியம் 2000 சாதாரண தர மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் பிரதி அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர் சங்கம் என்பன சார்பாகவும் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)