இலங்கை வந்துள்ள சீன உதவியமைச்சர் தலைமையிலான குழுவினர் எதிர்க்கட்சித் தலைவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடல்.
சீன உதவியமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்துக்கு சென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார மற்றும் பல்வேறு விடயங்கள் பற்றி நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.
சீன உதவியமைச்சர் சன் ஹையன் இக் குழுவினரிடம் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து தூதுக்குழுவினரிடம் விபரித்ததுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அவற்றினை எவ்வாறு தீர்த்து வைப்பது குறித்தும் விபரித்தார்.