இடம்மாற்றம் பெற்றுச் சென்றார் முஹம்மது சதாம்.
கல்பிட்டி பிரதேச செயலகத்தில் சுமார் இரண்டரை வருடங்கள் கடமையாற்றி நேற்றைய தினத்துடன் இடம்மாற்றம் பெற்றுச் சென்றார் முஹம்மது ரிசான் முஹம்மது சதாம்.
கல்பிட்டி பிரதேச செயலகத்தின் வாகன வரி அனுமதிப்பத்திரப் பிரிவில் கடமையாற்றி வந்த பரகஹதெனியாவை பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மது ரிசான் முஹம்மது சதாம் சுமார் இரண்டரை வருடங்கள் மிகச்சிறந்த சேவையினை கல்பிட்டி பிரதேச மக்களுக்கு வழங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்றுடன் இடமாற்றம் பெற்று பம்முனாகொட்டுவ பிரதேச செயலகத்திற்குச் செல்லும் இவருக்கு கல்பிட்டி பிரதேச செயலலாளர் ஜே.எம் ஷமில இந்திக்க ஜெயசிங்க தலைமையில் பிரியாவிடை நிகழ்வு கல்பிட்டி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் ஜே.எம். ஷமில இந்திக்க ஜெயசிங்க குறிப்பிடுகையில் , ” சதாம் மக்களுக்கான சிறந்த சேவைகளை வழங்கியிருந்தார். அத்துடன் மிகத் தொலைவிலிருந்து வந்து இப்பகுதி மக்களுக்கு சேவை செய்தமை அவருடைய சிறப்பம்சமாகும். அத்துடன் சதாம் போன்ற சிறந்த சேவையாளரை கல்பிட்டிப் பிரதேச செயலகம் இழக்கின்றமை வேதனைக்குறியது.” என்றார்.
இந்நிகழ்வில் கணக்காய்வாளர் ஏ.எச்.எம்.எஸ். பண்டார , நிறுவாக உத்தியோகத்தர் எஸ். மர்ஜானா, நிதி உதவியாளர் எஸ்.எம். ரிஸான் மற்றும் நிதிப் பிரிவு உத்தியோகத்தர்கள் சகிதம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். மேலும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் முஹம்மது சதாமிற்கு நினைவுச் சின்னமும் , பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(பஹர்தீன் அரபாத்)
(பட உதவி: எஸ்.எம். ரிஸான்)