Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

ஓய்வு பெற்ற அதிபர் முஹம்மது உடையார் மாஸ்டர் காலமானார்

ஓய்வு பெற்ற அதிபர் எஸ் எம் முகமது உடையார் மாஸ்டர் என்று அழைக்கப்படும் கெவிலிபிட்டிய, அரநாயக்க உடையார் நேற்று (22) மாலை காலமானார்.

மாவனல்லை, அரநாயக்க, கெவிலிபிட்டியவை சேர்ந்த ஷேக் முஹம்மது உடையார் ஆசிரியர் அவர்கள் தனது 102ஆவது வயதில் நேற்று (22-04-2024) காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா அடக்கம் நாளை 23 ஆம் திகதி 12.30 நண்பகல் லுஹர் தொழுகைக்கு பின்னர் வில்பொல ஜும்மா பள்ள மையவாடியில் நடைபெறவுள்ளது.

இவர் கண்டி இராசதானியின் இரண்டாம் ராஜசிங்க மன்னரின் அரண்மனை மருத்துவர்களாக யெமன் தேசத்தில் இருந்து இலங்கைக்குத் வரவழைக்கப்பட்ட உடையார் பரம்பரையின் 5ம் வாரிசாக இவர் அடையாளம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *