கல்வி அமைச்சின் முஸ்லிம் கல்வி அபிவிருத்தி பிரிவின் நோன்பு பெருநாள் விசேட இஸ்லாமிய கலை கலாசார நிகழ்வு..!
இம்முறை கல்வி அமைச்சின் முஸ்லிம் கல்வி அபிவிருத்தின் பிரிவின் நோன்புப் பெருநாள் விசேட இஸ்லாமிய கலை கலாசார விழா மாவனல்லை சாஹிரா தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு கேட்போர் கூட மண்டபத்தில் அதிபர் ஏ. எம். நௌசாட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகார மேலதிகச் செயலாளர் திருமதி உதார திக்கும்புர அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும் போது, எம்மைப் பிரிப்பதற்காக இனம் மதம், நிறங்கள், குல பேதங்களை ஆயுதமாகப் பயன்படுத்தினாலும் அவற்றை எங்களுடைய பிள்ளைகள் நிராகரித்து விட்டுத்தான் நாம் முன்னோக்கிய பயணத்தைச் செல்ல வேண்டும். சிலர் இதை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு செயற்பட முனைகின்றனர். பாடசாலைப் பிள்ளைகள் அவற்றிலிருந்து விலகி இந்நாட்டில் வாழும் சகல மக்களுடனும் ஒற்றுமையாகவும் சகவாழ்டனும் வாழ வேண்டும் என்று தெரிவித்தார்.
கௌரவ அதிதியாக கல்வி அமைச்சின் முஸ்லிம் கல்வி அபிவிருத்திப் பிரிவின் கல்விப் பணிப்பாளர் மேஜர் என். தி. நசுமுத்தீன் அவர்களும், கல்வி அமைச்சின் அழகியல் பிரிவின் கல்விப் பணிப்பாளர் திரு வர்ண அழககோன். மாவனல்லை கல்விப் பணிப்பாளர் திருமதி பிரிய தர்சினி, சிறப்பு விருந்தினராக தேசியப் பாடசாலைப் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி திஎம்ஆர்டப்லியூஎம். திவெகரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ஹிங்குல்லோயா மஸ்ஜிதுல் ஹ{தா பள்ளிவாசலில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் கலாசார ஊர்வலம் சாஹிராவின் ஆரம்ப பாடசாலை வரை சென்றடைந்து விழா வெகு விமர்சiயாக இடம்பெற்றது
கேகாலை மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர் மாணவிகளின் இஸ்லாமிய கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் பங்கேற்ற பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. அதிதிகளை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
இந்த வருடம் ஒரு விசேட வருமாகும். சிங்கள தமிழ் புதுவருடத்தையும் முஸ்லிம் ரமழான் பண்டியினையும் ஒரு நாட்களில் கொண்டாடக் கிடைத்துள்ளது. இது ஒரு விசேட அம்சமாகும். அந்தவகையில் இன மத வேறுபாடுகளின்றி எமது புதிய ஆண்டைக் கொண்டாட சந்தர்ப்பம் கிடைத்தது. அதுதான் இந்நாட்டில் நடைபெற வேண்டும். மாணவர்களின் நலன்களுக்காக எதிர் வரும் காலங்களில் புதிய கல்வி த் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளனர்.
சமயம் என்று சொல்லை பிரித்துப் பார்ப்பதல்ல. எல்லா சமங்களும் ஒரே விடயத்தைத்தான் பேசுகின்றன. பௌத்தமாக இருக்கலாம் இந்துவாக இருக்கலாம். இஸ்லாமாக இருக்கலாம். கிறிஸ்தவமாக இருக்கலாம். இவை எல்லாம் பேசுவது சகோதரத்துவத்தையும் ஒருவர் ஒருவர் அன்பு செலுத்துவதையும் கௌரவப்படுத்துவதையும், நல்ல வழிகாட்டலை ஏற்படுத்ததைப் பற்றிய பொதுவான அம்சங்களையே கொண்டுள்ளன. நாங்கள் இந்த முன்மாதரியான விடயங்களை எதிர்கால உலகிற்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
எங்களைப் பிரிப்பதற்காக இனம் மதம், நிறங்கள், குல பேதங்களை ஆயுதமாகப் பயன்படுத்தினாலும் அவற்றை எங்களுடைய பிள்ளைகள் நிராகரித்து விட்டுத்தான் நாம் முன்னோக்கிச் சொல்ல வேண்டும். சிலர் இதை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு செயற்பட நிறையப் பேர் முனைந்து வருகின்றனர். கடந்த 30 வருடமாக கொடிய யுத்தத்தின் காரணமாக பெரியளவில் பாதிப்புற்றிருந்தோம். இங்குள்ள பிள்ளைகளில் சிலர் பிறந்திருக்காமல் இருந்து இருக்கக் கூடும். ஆனாலும் உங்கள் தாய் தந்தையர்களைக் கேட்டால் இது பற்றி நன்கு சொல்வார்கள். கொழும்பில் பஸ்ஸில் போது எந்தளவு அச்சத்துடன் சென்றோம் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது அவைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியாகவும் சுகவாழ்வுடன் ஒற்றுமையாக வாழ்ந்துவருகின்றோம்.
பொருளாதார ரீதியாக சிற்சில குறைபாடுகள் இருந்தாலும் நாங்கள் பாடசாலைக் கல்வியை இந்தப் பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதில் அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சில காலம் பாடசாலைகளுக்குரிய உபரணங்கள் வழங்க முடியவில்லை. இந்த நாட்டிலும் முழு உலகிலும் நிலவிய பொருளாதார நெருக்கடியான நிலைமை இதற்கு காரணம் ஆகும். எங்களுக்கு கிடைக்கக் கூடிய ஒதுக்கீடுகளின் குறைபாடுகள் காரணமாத்தான்.
எனினும் இந்தப் பாடசாலையில் சிறந்த பழைய மாணவர்கள் இருக்கின்றார்கள். பாடசாலை சமூகத்திடமிருந்து நிறைய உதவிகள் கிடைக்கின்றன. அவ்வாறு வழங்கும் உதவிகள் பாடசாலையின் வளர்ச்சிக்கு மென்மேலும் உதவி செய்யுமாறு உங்களிடம் கேட்டுக்கோள்கின்றேன். இப்பாடசாலையின் அதிபரை இப்பாடசாலைக்கு வரும் முன் காலத்தில் இருந்து நன்கு தெரியும். தொழில் நுட்ப விடயம் தொடர்பில் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்போடு செயலாற்றியவர்.
இப்பாடசாலையில் தொழில் நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடயங்கள் இருப்பதாக தெரிவித்தார்கள். அதிபரின் நடவடிக்கைகளுக்கு மிகவும் சிறந்த ஆசிரியகு குழாம் இங்கு உள்ளனர். அதுவும் ஆண்கள் ஆசிரியர் அதிகளவு இருப்பது மிகவும் சிறப்பான வியடம். இப்பாடசாலையிலுள்ள ஆசிரியர் குழாத்தினர்கள் அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிபார்க்கின்றேன். இந்த மானவல்லை கல்வி வலயம் இலங்கையில் முன்னணிமிக்க வலயமாக மாற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
இப்பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் மிகவும் பாராட்டத்தக்க அமைந்துள்ளன. பாடத்துறையில் நாட்டம் காட்டுவதைப் போன்று தொழில் நுட்பம் விளையாட்டுத்துறை அழகியல் துறை சகல எல்லா விடயங்களிலும் சரி சமமான திறமையோடு செயற்படுவோமாயின் அப்பொழுதுதான் எமது எதிர்கால இலங்கை கட்டி யெழுப்ப முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.