உள்நாடு

சங்ரில்லா ஹோட்டலில் அனுஷ்டிக்கப்பட்ட ஈரானின் படை வீரர் தினம்..!

ஈரான் இஸ்லாமிய குடியரசின் வருடாந்த பாதுகாப்பு படையினரின் தினம் 18.04.2024 கொழும்பில் உள்ள ஈரான் தூதரகம் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் அனுஸ்டிக்கப்பட்டது.. இந் நிகழ்வுக்கு ஈரான் நாட்டின் இலங்கைக்கான துாதுவர் கலாநிதி அலிசா டெல்கோஸ் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அத்துடன் இலங்கையில் உள்ள முப்படைகளின் நிறைவேற்று தரத்தில் உள்ள அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .அத்துடன் ஈரான் தூதுவராலயத்தின் பாதுகாப்பு அதிகாரி அலிஜாரி வரவேற்புரை நிகழ்த்தினார் .அத்துடன் ஈரான் துாதுவர் ஈரான் பாதுகாப்புப் படைகளது முன்னேற்றம். ஈரான் இஸ்லாமிய புரட்சி அதன் பின்னரான காலத்தில் ஈரான் தேசம் முப்படைகள் அணு ஆயுதம் மற்றும் விமான தரைப்படைகள், விஞ்ஞான ஆராய்ச்சிகள் கடற்படைகளின் முன்னேற்றம் பற்றியும் உரையாற்றினார். அத்துடன் பலஸ்தீன் நாட்டின் நடைபெறும் அநியாயங்கள் யுத்தம் பற்றியும் ஈரான் துாதுவர் அங்கு உரையாற்றினார்.

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் கமல் குணரத்தின் அங்கு உரையாற்றுகையில்
இலங்கை – ஈரான் பாதுகாப்பு மற்றும் நட்புரவுகள். கடல்பிராந்தியத்தில் இலங்கை ஈரான் பாதுகாப்பு மற்றும் ஈரான் நாடு பாதுகாப்புத்துறையில் அடைந்துள்ள முன்னேற்றங்கள். பேசியா நாடாக இருந்த ஈரான் கடந்த காலங்களில் இ அடைந்து வரும் புரட்சிகள் பண்டையகாலத்து பேசியா பேரசர் காலத்தில் ஈரான் நிலையான கொள்கையுடன் அந்த நாடு அடைந்து வரும் முன்னேற்றங்கள் இலங்கை ஈரான் நட்புரவு பற்றியும் பாதுகாப்புச் செயலாளர் அங்கு உரையாற்றினார்

அத்துடன ஈரான் பாதுகாப்பு தினத்தின் ஞாபகார்த்த கேகினை வெட்டியும் அதிதிகள் பரிமாறப்பட்டடது அத்துடன் ஈரான் பாதுகாப்பு சம்பந்தமான விவரன ஒலித்தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது.. இந் நிகழ்வில் இலங்கையில் உள்ள அல் முஸ்தபா பல்கலைக்கழக கத்தின் பணிப்பாளர்கள், ரசியா, சீனா, பங்களதேஸ், பாக்கிஸ்தான் மலேசியா நாடுகளின் துாதுவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

(அஷ்ரப் ஏ சமத்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *