3.6 பில்லியன் இலாபம் ஈட்டிய தேசிய லொத்தர் சபை..!
தேசிய லொத்தர் சபை வெளியிடும் லொத்தர் சீட்டுக்கள் விற்பனை மூலம் கடந்த 2023 வருடத்தில் 3.6பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட இது இரட்டிப்பு இலாபம் எனவும் லொத்தர் சீட்டு விற்பனையில் வரலாற்றுப் பதிவான இலாபம் எனவும் தெரிவிக்கும் இச் சபை பெறப்பட்ட வருமானம் ஜனாதிபதி நிதியத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தேசிய லொத்தர் சபை பல்வேறு பெயர்களில் இருபதுக்குமதிகமான (சுரண்டும் லொத்தர் சீட்டுக்கள் உட்பட) லொத்தர் சீட்டுக்களை நாடெங்கும் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகாலம் முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலை 20 ரூபாவாகவிருந்து பின் அது 30 ரூபாவாக விலை அதிகரித்தபோது அதற்கு எதிர்ப்பு கிளம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் சமீபகாலமாக இச்சீட்டு 40 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த லொத்தர் சீட்டுக்களை கொள்வனவு செய்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டிவருவதுடன் பலர் இதன்மூலம் அதிர்ஷ்டசாலிகளான தகவல்களும் பதிவாகியுள்ளன.
(ஏ.எம்.ஜலீல்)