தர்காநகர் வைத்தியசாலை புனர் நிர்மாண பணிகளை பார்வையிட ஜனாதிபதி ஆலோசகர் சாகல வருகை.
2017 ஆம் ஆண்டு ஆரம்பமான தர்கா நகர் பிராந்திய வைத்தியசாலை புணர் நிர்மான பணிகள் 2024 ஆம் ஆண்டு ஆகியும் பூர்த்தியாக்கப்படாத நிலையில் இது சம்மந்தமாக ஐக்கிய தேசியக் கட்சி தர்கா நகர் இணைப்பாளர்கள் சாமில் அப்பாஸ் மற்றும் நிப்ராஸ் மன்ஸூர் ஆகியோர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி தலைமை அதிகாரி கௌரவ சாகல ரத்நாயக்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று வைத்தியசாலையை பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக் கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க கௌரவ சாகல ரத்நாயக்க அவர்கள் வைத்தியசாலையை பார்வையிட கடந்த 17ஆம் திகதி திடீர் விஜயம் செய்தார்.
வைத்தியசாலை நிர்மான பணிகளை பார்வையிட்டு விட்டு வைத்தியசாலையன் வைத்திய அதிகாரி இஹ்ஸான் ஹரீஸ், தாதியர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை சங்க தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் நயிம், வைத்தியசாலை சங்க உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை முன்னாள் வேட்பாளர்கள் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் முன்னிலையில் உரையாற்றிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி தலைமை அதிகாரி கௌரவ சாகல ரத்நாயக்க அவர்கள் தர்கா நகர் பிராந்திய வைத்தியசாலையின் புணர் நிர்மான பணிகளை எதிர்வரும் 2024 ஆகஸ்ட் மாதத்தில் முழுமையாக முடிவடையச் செய்து அங்க சம்பூர்ணமான நிலையில் மக்கள் பாவனைக்கு பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார்.
தர்கா நகர் மற்றும் சுற்றுப்புறத்தில் வாழும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் மக்களுக்கு இவ் வைத்தியசாலை பயன் மிக்க ஒன்றாக மாறி அனைத்து மக்களும் பயன் பெறுவதற்கு எமது தர்கா நகர் வைத்தியசாலையின் புணர் நிர்மான பணிகள் மிக விரைவில் முடிவடைய வேண்டும் என்பதே அனைவரினதும் பிரார்த்தனை ஆகும்.
(படங்கள் : பேருவளை பீ. எம். முக்தார்)