Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அழகுராணி போட்டி..!

கொத்தொட்டுவையில் உள்ள மருத்துவ அலுவலகத்தின் குடும்ப நல தாதிகள் மற்றும் பொதுச் சுகாதார அதிகாரிகளின் ஏற்பாட்டில் இப்பிரதேசவா ழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்காக புதுவருட விளையாட்டு, அழகு ராணிப் போட்டிகள் முதற்தடமையாக நேற்று கொத்தொட்டுவையில் உள்ள பிரதேச மருத்துவ மனையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிங்கள முஸ்லிம் கர்ப்பவதிகள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

குடும்பநல தாதிகளான சபோதினி, கெட்டியாரச்சி, நிசாரா,நந்தமாலி நவரத்தின ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் அவுருது குமாரி அழகுராணி கர்ப்பிணிப் பெண்கள் தெரிவில் சுலோச்சனா , அக்கீல் மற்றும் அம்னா ஆகியோர்களும் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

(அஷ்ரப் ஏ சமத்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *