Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

உக்குவளையில் நடாத்தப்படவுள்ள சாகித்திய கலை விழா- 2024 

கலாசார திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய உக்குவளை பிரதேச செயலகமும் கலாசார பிரிவும்  இணைந்த ஏற்பாட்டில் “சிறந்த நற்குண நற்பிரஜைகளை உருவாகுவோம்”  எனும் தொனிப்பொருளிலான  சாகித்திய கலை விழா– 2024  உக்குவளையில்  நடாத்தப்படவுள்ளது.

இவ்விழாவில் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளுடன் கலாசார போட்டிகளும்   பரிசளிப்பு நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றள்ளன.
 கலைத்துறைகளில்  ஆர்வமுள்ள  திறமைகளை வளர்த்துக் கொள்ளும்வகையிலமைந்த  5 வயது முதல்  19 வயதுக்கு மேற்பட்டவர்கள் (திறந்த போட்டி) இப்போட்டிகளில் பங்குபற்றலாம்.
பாலர் பிரிவு, சிறுவர் பிரிவு, கனிஷ்ட பிரிவு, சிரேஷ்ட பிரிவு, திறந்த பிரிவு என  நடாத்தப்படவுள்ள இப்போட்டிகளில் பங்குபற்றவிரும்புவோர் இதற்கான மேலதிக தகவல்களுக்கும் விண்ணப்பங்களுக்கும்  பிரதேச செயலக கலாசார பிரிவு காரியாலயத்துடன் தொடர்புகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *