கொழும்பு புத்தாண்டு நிகழ்வில் சவூதியின் காட்சி கூடம்.
சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை வெளிவிவகார அமைச்சினால் அதன் ஊழியர்கள் மற்றும் இலங்கைக்கான இராஜதந்திர தூதரக ஊழியர்களுக்காக,
இன்று, (ஏப்ரல் 20) சனிக்கிழமை கொழும்பில் உள்ள “பொலிஸ் பார்க்” மைதானத்தில் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வில், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகமும் பங்குபற்றியது.
சவூதி தூதரகத்துக்காக ஒதுக்கப்பட்ட கூடாரத்தொகுதியானது இராச்சியத்தின் விஷன் 2030 மற்றும் சவூதி அரேபியாவின் பல்வேறு துறைகளிலுமான தற்போதைய மறுமலர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் அமையப் பெற்றிருந்தது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் ஊழியர்கள் மற்றும் இந்திகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு சவூதி தூதரகம் மதிய உணவும் வழங்கியது.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பிரதித் தூதுவர் அப்துல்லா அர்கூபி மற்றும் இலங்கைக்கான இராஜதந்திர தூதரகங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.