இலங்கை கல்வி நிர்வாக சேவை அலுவலருக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சையில் ஆசிரியை அப்துல் சுகூர் நஸ்லியா பேகம் சித்தி
இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள இலங்கை கல்வி நிர்வாக உத்தியோகத்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சை பெறுபேற்றில் புத்தளம், பாலாவி ஹுஸைனியாபுரத்தை சேர்ந்த ஆசிரியை அப்துல் சுகூர் நஸ்லியா பேகம் சிறந்த புள்ளிகளை பெற்று பொது ஆளணி மற்றும் திட்டமிடல் ஆகிய இரு துறைகளிலும் சித்தியடைந்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இருவரில் ஒருவராகவும், தமிழ் மொழி மூலமாக இவர் மாத்திரமே தெரிவு செய்யப்படப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மன்னார் பெரிய மடுவை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தற்போது புத்தளம், பாலாவி ஹுசைனியாபுரத்தில் வசித்துவருகின்றார்.
புத்தளம் விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான பாட பட்டதாரி ஆசிரியராக கடமை ஆற்றி வரும் இவர் ஓய்வு பெற்ற வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அப்துல் சுகூர் அவர்களின் மகளும், கல்பிட்டி பிரதேச செயலகத்தின் கீழுள்ள ஏத்தாளை சமுர்த்தி வங்கியில் கடமையாற்றும் சமூர்த்தி கள உத்தியோகத்தர் எம். எஸ். எம். நிஸ்மியின் மனைவியும் ஆவார்.
கல்வித்துறையில் அரச உயர் பதவிக்குரிய சேவையான இச்சேவையில், அடுத்து வரும் வாய்மொழி மூலமான நேர்முகப் பரீட்சையிலும் சித்தி பெற்று எமது சமூகத்திற்கு சிறந்த சேவையை வழங்க எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
(அரபாத் பஹர்தீன்)