கிழக்கு மாகாண ஆளுநராக ஹாபிஸ் நசீர்; வடமேல் மாகாணத்துக்கு செந்தில்.- அரசியல் அரங்கில் அதிரடி மாற்றங்கள்
கிழக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீரை நியமிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, ”லங்காதீப” செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் செந்தில் தொண்டமான், வடமேல் மாகாணத்துகக்கு நியமிக்கப்படவுள்ளார் என்றும், அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனஇ தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, பல மாகாணங்களின் ஆளுநர் பதவிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அரசியலமைப்பின் பிரகாரம்இ எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கிடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் செயற்பாட்டை ஒழுங்கமைக்கும் வகையில், ஆளுநர் பதவிகளில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
( ஐ. ஏ. காதிர் கான் )