விளையாட்டு

விரைவில் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறவுள்ள சமரி அத்தபத்து

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும், சகலதுறை வீராங்கனையுமான சமரி அத்தபத்து மிக விரைவில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

34 வயதான சமரி அத்தபத்து இடது கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவும்இ வலதுகை சுழற்பந்து வீச்சாளராகவும் இலங்கை மகளிர் அணிக்காய் விளையாடி வருகின்றார். இதுவரையில் 101 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 3513 ஓட்டங்களையும் 29 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். மேலும், இவரின் மிகச் சிறந்த ஒருநாள் துடுப்பாட்டமாக ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்றமை பதிவாகியுள்ளது.

மேலும், 125 ரி20 போட்டிகளில் பங்கேற்று 2731 ஓட்டங்களையும் 41 விக்கெட்டுக்களையும் இதுவரையில் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், நேற்று ஊடகசந்திப்பில் பங்கேற்ற சமரி அத்தபத்து குறிப்பிடுகையில், ”நான் மிக மிக விரைவில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுக்கவுள்ளேன் இன்னும் சரியாக எப்போது என்பதை தீர்மானிக்கவில்லை. ஆனால் மிக விரைவில் ஓய்வினை அறிவித்து கிரிக்கெட்டிற்கு விடை கொடுக்கவுள்ளேன்.” என தெரிவித்தார்.

மேலும் சாதனை வெற்றிக்குத் துணைநின்ற சமரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

(அரபாத் பஹர்தீன்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *