கார்தினலை சந்தித்தது தேசிய மக்கள் சக்தி..!
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதியை ஈடேற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று (18) முற்பகல் 11.00 மணிக்கு பொரளையில் உள்ள பேராயரின் இல்லத்தில் வைத்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களால் கையளிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்களை இலக்காகக்கொண்டு தீவிரவாதிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், அத்தாக்குதலால் நிர்க்கதிக்குள்ளானவர்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் முறையாக சட்டத்தை அமுல்படுத்தும் எனவும்,
மேற்படி தாக்குதலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக முறைப்படி சட்டத்தை அமுலாக்குமெனவும் வலியுறுத்தும் 07 விடயங்கள் அந்த உறுதியுரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்து பேராசிரியர் கிறிசாந்த அபேசிங்க, சட்டத்தரணி சுனில் வட்டகல, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, சிரேஷ்ட பேச்சாளர் ரொஹான் பெர்ணான்டோ, அருண சாந்த நோனிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.