மெதகெகில பிறிமியர் லீக் இம்முறை சுப்பர் ஸ்டார் வசமானது.
தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஐந்தாவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டித் தொடரில் எம். சமீர் தலைமையிலான சுப்பர் ஸ்டார் அணி சாம்பியனாக தெரிவானது.
கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம், 14ஆம் திகதிகளில் மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஏ.எம். அஸ்கர் தலைமையிலான றோயல் செலர்ஜர்ஸ் அணியினை வெற்றிக் கொண்டே சுப்பர் ஸ்டார் அணி இந்த வெற்றியினை பதிவு செய்தது.
இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக சுப்பர் ஸ்டார் அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிப்லான் தெரிவானார். தொடரின் வளர்ந்து வரும் சிறந்த வீரராக சுப்பர் ஸ்டார் அணியின் இளம் வீரர் எம். ரைஸான் தெரிவானார். போட்டித் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக புலட் பிரதர்ஸ் அணியின் இடது கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஸீக் தெரிவான அதேவேளை சிறந்த பந்து வீச்சாளராகவும், 40 வயதுக்கு மேற்பட்ட சிறந்த வீரராகவும் றோயல் செலர்ஜர்ஸ் அணியின் எம். சியாம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மெதகெகில கிராமத்தின் வளர்ச்சிக்கு தமது பங்களிப்பினை வழங்கிய பெரியவர்கள், பரிசளிப்பு நிகழ்வின் போது நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(எஸ்.ஏ.எம். பவாஸ்)