மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர். சம்பியன் மகுடம் சிட்சிபாஸ் வசம்.
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் கேஸ்பர் ரூட்டை 6:1, 6:4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி நடப்பாண்டின் சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டார் கிரீஸின் சிட்சிபாஸ்.
மொனாக்கோவில் நடைபெற்ற களிமண் தரைப் போட்டியான மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் கடந்த 6ஆம் திகதி ஆரம்பித்திருந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் மற்றும் ஆடவர் இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றிருந்ததன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவுப் போட்டிகளின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான ஜெக்கோவிச்சிற்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்து இறுதிக்கு முன்ஆனறினார் நோர்வேயின் கேஸ்பர் ரூட்.
மற்றைய அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் சின்னரை எதிர்த்தாடிய சிட்சிபாஸ் மிக இலகு வெற்றியைப் பதிவு செய்து இறுதிப் போட்டிக்கான தனது வரவை உறுதிப் படுத்தினார். இந்நிலையில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், நேர்வெ வீரர் கேஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார். விறுவறுப்பாக இடம்பெற்ற இப் போட்டியின் முதல் செட்டை 6:1 என மிக இலகுவாகக் கைப்பற்றினார் சிட்சிபாஸ்.
பின்னர் தொடர்ந்த 2ஆவது செட்டில் ரூட் சற்று சுதாகரித்து ஆடிய போதிலும் தனது ஆதிக்கத்தினை நிலை நிறுத்திய சிட்சிபாஸ் 6:4 என கைப்பற்றிக் கொள்ள 1 மணித்தியாலம் மற்றும் 36 நிமிடங்கள் இடம்பெற்ற போட்டியில் 6:1 , 6:4 என்ற நேர் செட்கயளில் இலகு வெற்றி பெற்ற கிரீஸின் சிட்சிபாஸ் மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடரின் சம்பியன் மகுடத்தை தனதாக்கினார். சம்பியன் மகுடத் வென்ற சிட்சிபாஸுக்கு இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)