பாரிஸ் ஒலிம்பிக் தீபம் சம்பிரதாயபூர்வமாக ஏற்றப்பட்டது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தீபம் பண்டைய ஒலிம்பியாவில் நேற்று (16) பாரம்பரிய விழாவில் ஏற்றப்பட்டது.
எதிர்வரும் ஜுலை 26ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை 33 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் இடம்பெறவுள்ளன. அதற்கமைய இவ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் சம்பிரதாயபூர்வமாக நேற்று ஏற்றிவைக்கப்பட்டது. மேகமூட்டமான வானம் காரணமாக பரவளைய கண்ணாடிக்குப் பதிலாக காப்புச் சுடரைப் பயன்படுத்தி, கிரேக்க நடிகை மேரி மினா ஒலிம்பிக் சுடரை ஏற்றினார்.
அத்துடன் கிரீஸ் நாட்டின் ஜனாதிபதி கேடரினா சகெல்லரோபௌலோ, பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி ஓடியா-காஸ்டெரா, பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ ஆகியோர் ஒலிம்பிக் சுடர் ஏற்றும் விழாவில் கலந்துகொண்டனர். அமெரிக்க மெஸ்ஸோ சோப்ரானோ ஜாய்ஸ் டிடோனாடோ ஒலிம்பிக் கீதத்தைப் பாடினார்.