கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆளுமைகள் ஐவருக்கு பாராட்டும், பிரியாவிடை நிகழ்வும். .!
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் மூன்று கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்றுச் செல்லும் இரு ஆசிரிய ஆலோசகர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு (09) கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தலைமையில் வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
இடமாற்றம் பெற்றுச் செல்லும் மூன்று கல்வி நிருவாக சேவை அதிகாரிகளான பீ. ஜிஹானா ஆலிப் (கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்வி பணிப்பாளர்), யூ.எல். சாஜித் (உதவிக்கல்விப் பணிப்பாளர்-உடற் கல்வி மற்றும் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர்), என்.எம்.ஏ.மலீக்(உதவிக் கல்விப் பணிப்பாளர்- ஆங்கிலம் மற்றும் சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர்) ஓய்வு பெறும் இரு ஆசிரிய ஆலோசகர்களான சீ. செல்வராஜா (விவசாயம்), எம்.எஸ். சஹ்துல் அமீன் (விஞ்ஞானம்) ஆகியோர் பாராட்டி, நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபிர், எம்.எச். றியாஸா, என். வருண்யா, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. சன்ஜீவன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு விஷேட உரைகளையும் ஆற்றினர்.
நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நடந்தேறிய இந் நிகழ்வினை ஆசிரிய ஆலோசகர் ஏ.றாஸிக் நெறிப்படுத்தியத்துடன் ஆசிரிய ஆலோசகர்களான ரீ.கே. பத்திரன, எம். லக்குணம் ஆகியோரும் விடைபெறும் அதிதிகள் தொடர்பில் சிறப்புரையாற்றினர்.
(நூருல் ஹுதா உமர்)