சகலருக்கும் சுபீட்சத்தை உதயமாக்கித் தரும் நாடாகவே அடுத்த புத்தாண்டை நாம் கொண்டாட வேண்டும். -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
நாடு இவ்வாறான பாதாளத்தில் விழும் முன் சித்தரிரைப் புத்தாண்டின் போது மக்களின் கைகளில் பண புழக்கம் இருக்கும். வீட்டில், உணவு, பானம், புத்தாடை எனப் பெருமைக்குரிய முறையில் நமது நாட்டவர் புத்தாண்டை கொண்டாடி வந்ததாலும், இன்று எமது நாட்டு மக்கள் இந்த சிங்கள, தமிழ் புத்தாண்டை வங்குரோத்து நாட்டில் இருந்து கொண்டாடுகின்றனர். இலட்சக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் வாடும் நாட்டில் 41 இலட்சம் பாடசாலை மாணவர்களின் இலவசக் கல்வியுடன் இப்புத்தாண்டை கொண்டாட நினைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் புதிய இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது.இது இயல்பாக உருவான நிலை இல்லை.அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நியல்புநிலையாகும். இந்த ஆண்டு புத்தாண்டு சாப்பாட்டு மேசைக்கான ஆகாரங்களின் விலைகள் கூட உயர்ந்து, எண்ணெய் நுகர்வு குறைந்து, நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஏழ்மையாகி விட்ட இயல்பு நிலையே நாட்டில் நிலவுகிறது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முறைவோரின் தொழில்கள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான நிலையில் புத்தாண்டைக் கொண்டாட முடியாது என்பதால், அடுத்த வருட சிங்கள தமிழ் புத்தாண்டை அனைவருக்கும் சுபீட்சம் தரும் ஸ்மார்ட் நாட்டில் கொண்டாட வழி பிறக்கட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 155 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை, திஸ்ஸமஹாராம, வீரவில பன்னேகமுவ ரோயல் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 12 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில், கல்லூரியின் நடனம், வாத்தியம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார். மேலும்,பாடசாலையில் அதித திறமையை வெளிப்படுத்திய எச்.கே.ஏசர எனும் மாணவனுக்கு மடிக்கணினி ஒன்றினையும் வழங்கி வைத்தார்.
கல்வியில் நிலவும் தவிர்க்க முடியாத இடைவெளி நிரப்பப்பட வேண்டும்.
உள்ளோர் இல்லாதோர் இடைவெளி நிவர்த்திப்பதன் மூலம் வறுமையை ஒழிப்பது போலவே, வசதிகளற்ற பாடசாலைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வு கழையப்பட வேண்டும். கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த ஏற்றத்தாழ்வை களைந்து ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வியை வலுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாடசாலைகளை ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றுவது போலவே, சமய ஸ்தலங்கள் மற்றும் ஞாயிறு போதனா கல்வியை வழங்கும் நிறுவனங்களையும் ஸ்மார்ட் கட்டமைப்பாக மாற்றுவதும் தமது நோக்கமாகும். இதன் மூலம் கிராம, நகர பிள்ளைகள் என எத்தகைய ஏற்றத்தாழ்வுகளும் இன்றி தகவல் தொழில்நுட்பம் கற்கும் சூழல் உருவாகும். மதத்தைப் பொருட்படுத்தாமல், நேர்மையான, ஒழுக்கமுள்ள நீதி நியாயத்தை மதிக்கும் சிறந்த மனித வளமிக்க இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாடு வங்குரோத்தடைந்ததை தொடர்ந்தே இன்று 76 ஆண்டுகால வரலாறு குறித்து பலரும் பேசுகின்றனர். நாம் வங்குரோத்தடையாதிருந்தால், எங்கள் தவறுகளைப் பற்றி பேசாதிருந்திருப்போம், நாங்கள் அது குறித்து திரும்பிப் பார்த்திருக்க மாட்டோம். இந்த வரலாற்றில் அனைவரும் அதிகாரத்துடனே நாட்டுக்காக சேவை செய்துள்ளனர், ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி இந்த சம்பிரதாய முறையை மாற்றியமைத்து, எதிர்க்கட்சி அரசியலுக்கும், கட்சி அரசியலுக்கும் புதிய பாடங்களை எம்மாலான மட்டத்தில் கற்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தெரிவித்தார்.