இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி..!
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை அரசுக்கும், இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு என்பது மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் நாள்; அயலவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் சமாதானம் பேணவேண்டிய நாள்.
இந்த மங்களகரமான சந்தர்ப்பம், உறவுமுறை, சமாதானம் ஆகியவற்றின் பிணைப்பை புத்துயிர் பெறச்செய்வதற்கும், ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மை மற்றும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கிறது. இந்த நன்நாள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
தமிழ் சிங்களப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
காலித் ஹமூத் அல்கஹ்தானி