6 பந்துகளில் 6 சிக்ஸ்ஸர்கள். நேபாள் வீரர் சாதனை
ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ரி20 தொடரில் கத்தார் அணிக்கு எதிரான போட்டியில் நேபாளம் அணி வீரரான திபேந்திரா சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸ்ஸர்களை அடித்து கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸ்ஸர்களை அடிப்பது அவ்வளவு சாதாரணம் கிடையாது. ரி20 கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் தாக்குதல் உச்சத்தில் இருந்தாலும், ஒரே ஓவரில் 6 சிக்ஸ்ஸர்களை இதுவரை 2 பேர் மட்டும் அடித்துள்ளனர். 2007இல் இடம்பெற்ற ரி20 உலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்து அணியின் ஸ்டுவர்ட் ப்ரோட் பந்தவீச்சலி; இந்திய அணியின் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸ்ஸர்களை அடித்து சாதனை படைத்தார்.
இதன்பின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிரன் போலார்ட் அகில தனஞ்சயவின் பந்துக்க 6 பந்துகளில் 6 சிக்ஸ்ஸர்களை அடித்து சாதனை படைத்தார். ஆனால் இந்த ஓவரில் இலங்கை அணி வீரர் அகில தனஞ்சய ஒரு நோ-பாலை வீசியதால் பொலார்ட் இந்த சாதனையை படைக்க முடிந்தது. இந்த நிலையில் ஏசிசி பிரீமியர் கிண்ண தொடரில் மீண்டும் இந்த சாதனை அரங்கேறியுள்ளது.
இதில் நேற்றைய தினம் 7ஆவது லீக் ஆட்டத்தில் கத்தார் அணியை எதிர்த்து நேபாளம் அணி களமிறங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதன்பின் கடைசி ஓவரை வீச கத்தார் அணியின் கம்ரான் கான் அழைக்கப்பட்டார். இந்த ஓவரை நேபாள அணியின் திபேந்திரா சிங் எதிர் கொண்டார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே அபாரமாக சிக்ஸ் அடிக்கஇ 2ஆவது பந்தில் டீப் பெய்ண்ட் திசையில் சிககஸருக்குப் பறக்கவிட்டார். தொடர்ந்து 3ஆவது பந்தில் மிட் விக்கெட் திசையிலும், 4ஆவது பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் மூலமாகவும் சிக்ஸ் விளாசப்பட்டது. 5ஆவது பந்தில் அடிக்கப்பட்ட சிக்சர் அருகில் இருந்த பயிற்சி மைதானத்தில் சென்று விழுந்தது. இதனால் 6ஆவது பந்திலும் சிக்ஸ் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
மீண்டும் 6ஆவது பந்திலும் சிக்ஸ்ஸர் அடிக்கப்பட்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதன் மூலமாக நேபாளம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய திபேந்திரா சிங் 21 பந்துகளில் 7 சிக்ஸ்ஸர்கள் அடங்களாக 64 ஓட்டங்களை விளாசினார். இதன் மூலம் ரி20 கிரிக்கெட்டில் 6 பந்துகளில் 6 சிக்ஸ்ஸர்களை அடித்த 3ஆவது வீரர் என்ற சாதனையை திபேந்திரா சிங் படைத்துள்ளார்.
(அரபாத் பஹர்தீன்)