பலஸ்தீன் மக்களின் விடிவுக்காக நாம் என்ன செய்யலாம். ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.- ஜனாதிபதி சட்டத்தரனி எம்.எம் .சுஹைர்.
சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆபிரிக்காவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மெது மெதுவாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அந்தச் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையின் சர்பாக நீதியரசர் காலம்சென்ற கலாநிதி வீரமந்திரி அவர்கள் இருந்தார்கள் அவர்கள் கலாமானதையிட்டு அங்கு எமக்கு யாரும் இல்லை. நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக என்ன செய்யமுடியும்.? நாங்களும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்ய முடியும்.
அதற்காக நாம் சேகரிக்கும் வீடியோ கிளிப்ஸ், நாம் அவதானிக்கும் பலஸ்தீனர்களுக்கு நடைபெறும். அநீதிகள் சம்பந்தமான புகைப்படங்கள், நமது நாட்டில் நாம் எடுக்கும் அரச சிவில் மட்டத்தில் எடுக்கும் தீர்மாணங்கள், எமது நாட்டில் நடாத்தும் ஆர்ப்பாட்டங்கள், இஸ்ரேலுக்கு எதிராக நமது ஒவ்வெருவரினதும் கருத்துக்கள், நாம் பாராளுமன்றத்தில் எடுத்த தீர்மாணங்கள். அத்துடன் எமது நாட்டில் பல்லின சமயத்தலைவர்கள், சிவில் சமுகங்கள், இணைந்து பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக எடுக்கும் தீர்மாணங்கள், கையெழுத்து வேட்டைகள் இதனை நாம் சேகரித்து எமக்கு அனுப்ப முடியும். அதனை நாம் அவதானித்து கற்றறிந்து, சர்வசேத குற்ற நீதிமன்றத்திற்கு நாம் அனுப்ப முடியும். இஸ்ரேவேல் ஒர் உலகில் அங்கீகரிகப்பட்டதொரு நாடல்ல பலவந்தமாக சில வல்லரசு நாடுகளின் உதவியுடன் உருவான நாடாகும். அந் நாடு சர்வதேச நீதிமன்றத்திற்குள் உட்பட்ட தொரு நாடும் அல்ல. ஆனால் 2012ல் ஜக்கிய நாடுகள் அமையத்தில் பலஸ்தீன் அவதானிக்கும் ஒர் நாடாக அந்தஸ்த்து ஜக்கிய நாடுகளினால் வழங்கப்பட்டது. எதாவது ஒர் நாடு பலஸ்தீனுக்கு எதிராக குற்றமிழைக்க முற்படுமானால் அதற்கு எதிராக நாம் சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
முஸ்லிம் கவுன்சில் ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் சர்வதேச குத்ஸ் தினம் 4.04.2024 கொழும்பு 7 ல் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஈரான் நாட்டின் இலங்கைக்கான துாதுவர் கலாநிதி அலிரிசா டெல்காஸ் கலந்து கொண்டார் பிரதான உரையை ஜனாதிபதி சட்டத்தரனி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் ஈரான் துாதுவர் எம்.எம். சுகையிர் நிகழ்த்தினார்கள். அத்துடன் பாராளுமன்ற உறுப்பிணர்களான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், திலான் பெரேரா, சென்தோமஸ் வண.அருட்சகோதர் லயனல் பீரிஸ், மற்றும் களுப்பானபியரத்தின தேரர் ஆகியோர்களும் உரையாற்றினார்கள்.
இந் நிகழ்வு பலஸ்தீன நாடு முற்றுமுழுதாக சுதந்திரம் அடைதல், அந்த நாட்டில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்படல் வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை போன்ற நாடுகளும் அமைப்புக்களும் முன்வந்து வழக்கு தாக்குதல் செய்தல் வேண்டும். உலக நாடுகள் இஸ்ரேல் உற்பத்தி மற்றும் அவர்களை முற்று முழுதாக வேறுபடுத்துதல். அவர்கள் செயற்பாடுகளுக்கு கண்டனக் குரல் சர்வதேச மட்டத்தில் எழுப்புதல். உலகில் இருந்து அவர்களை வேறுபடுத்தல் வேண்டும். அத்துடன் இஸ்ரேல் ஆதரவாக இருக்கும் நாடுகளுக்கு எதிராகவும் கண்டனக் குரல் எழுப்பல் வேண்டும்.
கடந்த 6 மாத காலத்திற்குள் 30 ஆயிரம் 46 ஆயிரம் பலஸ்தீனர்கள் கொடுரமாக அப்பாவிகள் குழந்தைகள் வயதுமுதிர்தோர்கள் பெண்கள் இஸ்ரேவேலர்களினால் கொல்லப்பட்டுள்ளார்கள். சராசரியாக ஒவ்வொரு நாளும் 275 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.கடந்த 6 மாதங்களுக்குள் ஒவ்வொரு நாளும் 75 குழந்தைகள் கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.இந்தச் சிறார்கள் என்ன குற்றமிழைத்தார்கள்.பெண்கள் என்ன குற்றம் செய்தரர்கள். இவர்கள் ஹமாஸ் என்ற இயக்கத்திற்கு பின்னால் சென்றவர்களும் இல்லை.உங்களுக்க ஞாபகம் இருக்கலாம் 1976 ஜூலை 19 எயார் பிரான்ஸ் விமானம் கடத்தப்பட்டது. அதில் 105 இஸ்ரேலியர்களும் யுதரகளும் இருந்தார்க்ள. பலஸ்தீனியர்கள் அதனை கடத்திக் கொண்டு உகன்டாவுக்குச் சென்றார்கள். 103 பேரை அவர்கள் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். 3 பேர் மட்டுமே துப்பாக்கிச் சமரில் இறந்தார்கள்.இஸ்ரேவேலர்கள் அதற்காக சிறந்த பயிற்சியைப் பெற்று அவர்களை மீள எடுத்தார்கள்.
தற்போது பலஸ்தீனத்தில் இஸ்ரேவேலர்களினால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காடடு முராண்டிக் குற்றங்களை இந்த உலகில் உள்ள எந்தவொரு நாடும் அல்லது மனிதபினாமோ ஏற்றுக் கொள்ளாது. நாம் ஜெருசலத்தினைப் பற்றி பேசினால் அது 3 மதங்களுக்கான கிரிஸ்த்துவம், இஸ்லாம் யுதர்களுக்கும் மத்தியமாக உள்ளது. அங்கு மும்மதங்களுக்குமான சரித்திரம் வாய்ந்த நிறுவனங்கள் மதஸ்தலங்கள் அமையப் பெற்றுள்ளன. 1947ல் பலஸ்தீன் உலகில் தனிநாடாக இருந்த காலத்தில் சகல 3 மதங்களுக்கும் பாதுகாப்பாக அமையப்பெற்ற நாடாக இருந்து வந்தது.80 வீதமான முஸ்லிம்கள் அங்கு வாழ்ந்தார்கள்.கிரிஸ்த்தவர்கள் 10 வீதம் 10 வீதம் யுதர்கள் அங்கு வாழ்ந்தார்கள்.
அவர்கள் ஜக்கியமாகவும் சகோதரத்துவமாக அங்கு வாழ்ந்து வந்தார்கள். 1947 அங்கு வாழ்ந்த ஒர் இனம் பிரச்சினை ஏற்படுத்தி யது. கடந்த 75 வருடங்களுக்கு முன்பே அங்கு பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். அதற்காக யுதர்கள் உலகில் உள்ள ஊடகங்களை அவர்களுக்கு சார்பாக வைத்துக் கொண்டார்கள். அத்துடன் சில வல்லரசு நாடுகள் தமது ஆயுதங்களை விற்பதற்காகவும் மனிதனை படுகொலைக்காகவும் வெடிமருந்துகளை ஆயுதங்களையும் விற்பனை செய்து இரு நாடுகளை துாண்டிவிட்டு அதில் நன்மையடைவது. அந் நாட்டி்ல் உள்ள வளங்களை சூரையாடுவதற்காக இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதே படு மோசமானதொரு கலாச்சாரமாகும் என ஜனாதிபதி சட்டத்தரனி எம்.எம்.சுகையிர் அங்கு பிரதான உரையில் குறிப்பிட்டார்.
ஏனையவர்களது உரையில் பின்வரும் தலைப்புக்களில் உரையாற்றினார்கள். பலஸ்தீன் நாட்டினை ஜக்கிய நாடுகள் அமைப்பு உறுப்புரிமை நடாக்கி அந் நாட்டினை மீள கட்டியெழுப்புதல் வேண்டும். இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கடந்த 6 மாதத்திற்குள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களது சொத்து உடைமைகள் அழிக்கப்பட்டடுள்ள அவற்றினை மீள கட்டியெழுப்புதல் போன்ற பல்வேறு தலைப்புக்களில் மேற்சொன்ன பேச்சாளர்கள் உரையாற்றினார்கள் அத்துடன் முஸ்லிம் கவுன்சில் தீர்மாணம்மொன்றையும் வாசித்து வருகை தந்திருந்த அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டு உரிய நாடுகளுக்கும் ஜக்கிய நாடுகள் அமையத்திற்கும் அனுப்புவதாக ஏகமனதாக தீர்மாணிக்கப்பட்டது. அத்துடன் பலஸ்தீன் சார்வாபக செயல்படும் தென் ஆபிரிக்கா, பலஸ்தீன் துாதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி மற்றம சரவ மதத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.
இலங்கையிலிருந்து கடந்த 6 மாத்திற்குள் தொழிலுக்காக 10 ஆயிரம் பேர் இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார்கள். அதனை இலங்கை அரசாங்கம் மீள் பரிசீலனைப்படுத்துதல் வேண்டும். தேர்தல் காலத்தில் இலங்கையிலும் இனரீதியான பிரச்சினைகள் எழாது நாம் அவதானமாகவும் இருத்தல் வேண்டும். போன்ற தலைப்புக்களில் பேச்சாளர்கள் அங்கு உரை நிகழ்த்தினார்கள்.
(அஷ்ரப் ஏ சமத்)