அல்லாஹ்வின் அருள் பெறச் செய்த ரமழான். – பெருநாள் கவிதை
ஓ… புனித ரமழான் மாதமே…!
நீ… எம்மிடமிருந்து
விடை பெற்றுச் செல்கிறாயா…?
உனது மாட்சிமை மிக்க மகிமையால்…!
இன்று நாம்
உவகையுடன் ‘ஈத்’ பெருநாளைக் கொண்டாடுகிறோம்…!
புனித ரமழானே…
உனது வருகையால்
நாம் அளவிலா ஆனந்தம் கொண்டோம்…!
நீ பிரிந்து செல்வதினால்
பெரும் வேதனை அடைகின்றோம்…!
ரமழான் காலத்தில்…
அல்லாஹ்வின் அருள் பெறச் செய்தாய்…!
அனுதினமும் நம்மை தொழச் செய்தாய்…!
அருள் மழையைப் பொழியச் செய்தாய்…!
அருட் கொடைகளை அள்ளித் தந்தாய்…!
ஆசைகளை அடக்கி வைத்தாய்…!
பொய் புறங்களை நீக்கி வைத்தாய்…!
ஷெய்த்தானை விலங்கிடச் செய்தாய்…!
சேஷ்டைகளை நீக்கி வைத்தாய்…!
‘ரய்யான்’ சொர்க்கம் நமக்கென்றாய்…!
நன்மை தீமை எதுவெனப் புரிய வைத்தாய்…!
நாற் திசையும் புகழோத வைத்தாய்…!
நபிகள் புகழ் பாட வைத்தாய்…!
பக்குவமாய் நம்மை இருக்க வைத்தாய்…!
ஓ…
புனித ரமழான் மாதமே…!
நீ…
எம்மை விட்டும் பிரிந்தாலும்…!
உன் நினைவில் என்றும் நாம் இருப்போம்…!
உனக்காக வரும் வருடம் காத்து நிற்போம்…!
உன் வரவை உவகையுடன் எதிர் பார்த்திருப்போம்…!
நீ…
எம்மில் வந்து
நன்மைகளையும்
அருள் பாக்கியங்களையும்
மீண்டும் அள்ளித்தா…!
(பாத்திமா ரம்ளா காதிர் கான்)
மினுவாங்கொடை.