உள்நாடு

பண்டிகை காலத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள். – பேருவளை பொலிஸ் அதிகாரிகள் வலியுறுத்து.

பேருவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளிவாசல்கள்,சாதுலிய்யா ஸாவியாக்கள்,தக்கியாக்களின் நிர்வாகிகளுக்கான விசேட கூட்டமொன்று பேருவளை போலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சீனன் கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

புனித நோம்பு பெருநாள் தமிழ்-சிங்கள புத்தாண்டு அடுத்தடுத்து வருவதனால் பிரதேசத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் பத்மகுமார, களுத்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்ஷ ஆகியோர் விளக்கிக் கூறினர்.

நோன்புப் பெருநாள் தமிழ் சிங்கள புத்தாண்டு தினங்களில் மக்கள் மிகவும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என போலிசார் கேட்டுக் கொண்டனர். உற்சவ சமயங்களில் சில தீய சக்திகள் பிரச்சினைகளை ஏற்படுத்த இடம் உண்டு என்பதை புரிந்து முன்னெச்சரிக்கையாக அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இரு பெருநாட்களும் அடுத்தடுத்து வருகிறது. நகரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கிறது. திருடர்கள் கொள்ளையர்களும் இங்கே தமது கைவரிசையை காட்டலாம் இது குறித்தும் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று போலிசார் சுட்டிக் காட்டினர்.

புனித பெருநாள் தினத்தில் தொழுகை நடைபெறும் சமயத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். போலிசாருடன் விசேட அதிரடிப்படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்படுவர் விசேட ரோந்து சேவைகளும் மேற்கொள்ளப்படும். பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்காக வருபவர்கள் குறித்து நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும். தெரியாதவர்கள் வந்தால் சோதனை செய்து விபரம் கேட்டு உள்ளே அனுமதிக்க வேண்டும்.

பெருநாளை இரு சமூகத்தினரும் மிக அமைதியாக கொண்டாட வேண்டும். புனித ரமலான் மாதம் பேருவளை போலிஸ் பிரிவில் முஸ்லிம் மக்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சட்டத்தையும் ஒழுங்கையும் கடைப்பிடித்து செயல்பட்டனர் இதையிட்டு நன்றி கூறுகிறோம் என்றும் போலிஸார் தமது உரையின் போது சுட்டிக்காட்டினர்.

கலீபதுஷ்ஷாதுலி அஷ்செய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) களுத்துறை மாவட்ட அஹதியா சம்மேளன தலைவர் எம்.எச்.எம்.உவைன் ஹாஜியார் ஆகியோரும் பேசினர். சினன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளர் எம்.எம்.எம்.சிஹாப் ஹாஜியார், உப தலைவர் அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ரில்வான் (நளீமி) இணைப் பொருலாளர் அல்-ஹாஹ் ஸப்வான் நயீம் உட்பட பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *