பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அஸார் மொஹ்மூட் நியமனம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தான் அணியின் முன்னால் வேகப்பந்து வீச்சாளரான அஸார் மொஹ்மூட் அந்நாட்டு கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த கிரேன்ட் ப்ரட்போர்ன் பதவி விலகியதைத் தொடர்ந்து நியூஸிலாந்துக்கு எதிராக நியூஸிலாந்தில் இடம்பெற்ற 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்காக முன்னால் பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான முஹம்மது ஹபீஸ் செயற்பட்டிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை 4:1 என மிக மோசமாக இழந்தமையால் அவரும் அப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.
இதனால் வெற்றிடதமாகக் காணப்பட்ட பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு அவுஸ்திரேலிய முன்னால் சகலதுறை வீரர் ஷேன் வொட்சன், தென்னாபிரிக்க முன்னால் வீரர் ஹெரி கேஸ்டன் மற்றும்; நியூஸிலாந்து முன்னால் வீரர் ரொஞ்சி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை செய்யப்பட்ட போதிலும் அவர்கள் இப் பதவியை ஏற்க விரும்பவில்லை. இதனால் இம்மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தான் அணியின் முன்னால் பந்துவீச்சு சகலதுறை வீரரான அஸார் மொஹ்மூட் அந்நாட்டு கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார்.
49 சயதான அஸார் மொஹ்மூட் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்காக 1996 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை விளையாடியிருந்தார். ஒரு சிறந்த பந்துவீச்சு சகலதுறை வீரராக செயற்பட்ட இவர் பாகிஸ்தான் அணியின் ஏறாழமான வெற்றிக்கு துஐண நின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்ற அஸார் மொஹ்மூட் 219ஆம் ஆண்டுவரை அப் பதவியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)