அல் அக்ஸா அஹதியாவின் பரிசளிப்பு விழாவும், இப்தார் நிகழ்வும்
கல்பிட்டி அல் அக்ஸா அஹதிய்யா சன்மார்க்க போதனா பீடத்தின் பரிசளிப்பு விழாவும், இப்தார் நிகழ்வும் நேற்று (7) இடம்பெற்றது.
கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அஹதிய்யா சன்மார்க்க போதனா பீடத்தின் வருடாந்த கலை போட்டி நிகழ்வுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடனான இப்தார் நிகழ்வு அல் அக்ஸா அஹதிய்யாவின் அதிபர் திருமதி எம்.ஆர்.எஸ். நிஹாரா ரியால்தீன் தலைமையில் அல் அக்ஸா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் கலை போட்டி நிகழ்வில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் கிராத், பேச்சு, ஹசீதா மற்றும் வினா விடை போன்ற நிகழ்ச்சிகள் மேடையை அலங்கரித்திருந்தது. அத்துடன் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களுடன் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், போட்டி நிகழ்வில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் இந்நிகழ்வின் சிறப்பு அதீதிகளாக பங்கேற்ற அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி சாஜினாஸ் விசேட உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அஹதிய்யா சன்மார்க்க போதனா பீடத்தின் புத்தள மாவட்ட சம்மேளனத்தின் மேற்பார்வையில் தலைவரான திரு ரியாஸ் ஆசிரியர் அஹதிய்யா தொடர்பில் விளக்கம் அளிக்கும் உரையினை நிகழ்த்தியிருந்தார்.
பின்னர் இப்தார் நிகழ்வு இடம்பெற்று 7 மணியளவில் அல் அக்ஸா அஹதிய்யா சன்மார்க்க போதனா பீடத்தின் பரிசளிப்பு விழாவுடனான இப்தார் நிகழ்வுக்கு அத்துடன் இந்நிகழ்விற்கு அஹதிய்யா மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)