உள்நாடு

முஸ்லிம் கவுன்சில் ஏற்பாட்டில் சர்வதேச குத்ஸ் தினம்.

முஸ்லிம் கவுன்சில் ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் சர்வதேச குத்ஸ் தினம் 4.04.2024ஆம் திகதி கொழும்பு 7 ல் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஈரான் நாட்டின் இலங்கைக்கான துாதுவர் கலாநிதி அலிரிசா டெல்காஸ் கலந்து கொண்டார் பிரதான உரையை ஜனாதிபதி சட்டத்தரனி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் ஈரான் துாதுவர் எம்.எம். சுகையிர் நிகழ்த்தினார்கள். அத்துடன் பாராளுமன்ற உறுப்பிணர்களான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், திலான் பெரேரா, சென்தோமஸ் வண.அருட்சகோதர் லயனல் பீரிஸ், மற்றும் களுப்பானபியரத்தின தேரர் ஆகியோர்களும் உரையாற்றினார்கள்.

இந் நிகழ்வு பலஸ்தீன நாடு முற்றுமுழுதாக சுதந்திரம் அடைதல், அந்த நாட்டில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்படல் வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை போன்ற நாடுகளும் அமைப்புக்களும் முன்வந்து வழக்கு தாக்குதல் செய்தல் வேண்டும். உலக நாடுகள் இஸ்ரேல் உற்பத்தி மற்றும் அவர்களை முற்று முழுதாக வேறுபடுத்துதல். அவர்கள் செயற்பாடுகளுக்கு கண்டனக் குரல் சர்வதேச மட்டத்தில் எழுப்புதல். உலகில் இருந்து அவர்களை வேறுபடுத்தல் வேண்டும். அத்துடன் இஸ்ரேல் ஆதரவாக இருக்கும் நாடுகளுக்கு எதிராகவும் கண்டனக் குரல் எழுப்பல் வேண்டும்.

பலஸ்தீன் நாட்டினை ஜக்கிய நாடுகள் அமைப்பு உறுப்புரிமை நடாக்கி அந் நாட்டினை மீள கட்டியெழுப்புதல் வேண்டும். இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கடந்த 6 மாதத்திற்குள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களது சொத்து உடைமைகள் அழிக்கப்பட்டடுள்ள அவற்றினை மீள கட்டியெழுப்புதல் போன்ற பல்வேறு தலைப்புக்களில் மேற்சொன்ன பேச்சாளர்கள் உரையாற்றினார்கள்.

அத்துடன் முஸ்லிம் கவுன்சில் தீர்மாணம்மொன்றையும் வாசித்து வருகை தந்திருந்த அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டு உரிய நாடுகளுக்கும் ஜக்கிய நாடுகள் அமையத்திற்கும் அனுப்புவதாக ஏகமனதாக தீர்மாணிக்கப்பட்டது. அத்துடன் பலஸ்தீன் சார்வாபக செயல்படும் தென் ஆபிரிக்கா, பலஸ்தீன் துாதுவர்கள், பாராளுமன்ற உறுப்பிணர் ஏ.எச்.எம். பௌபசி மற்றம சரவ மதத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

இலங்கையிலிருந்து கடந்த 6 மாத்திற்குள் தொழிலுக்காக 10 ஆயிரம் பேர் இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார்கள். அதனை அரசாங்கம் மீள் பரிசீலனைப்படுத்துதல் வேண்டும். தேர்தல் காலத்தில் இலங்கையிலும் இனரீதியான பிரச்சினைகள் எழாது நாம் அவதானமாக இருத்தல் வேண்டும். போன்ற தலைப்புக்களில் பேச்சாளர்கள் அங்கு உரை நிகழ்த்தினார்கள்.


(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *