உள்நாடு

ஏத்தாளை சமுர்த்தி வங்கியில் நல்லிணக்கத்திற்கான இப்தார் நிகழ்வு

ஏத்தாளை சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (05) வங்கியின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஏத்தாளை சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் ஊழியர்கள் பங்கேற்ற இவ் இப்தார் நிகழ்வு பதில் முகாமையாளர் ஏ.ஜி. திலகரட்ன தலைமையில் இடம்பெற்றது.

வங்கியில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் சமுர்த்தி கள உத்தியோகத்தர்கள் என அனைவரும் பங்கேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் முஸ்லீம்களின் நோன்பு தொடர்பான விளக்கத்தினை ஏத்தாளை சமுர்த்தி வங்கியின் கள உத்தியோகத்தர்களின் தலைவரான பாலித பெர்ணான்டோ சிங்கள மொழியில் வழங்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *