தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இப்தார் நிகழ்வு..!
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வரலாற்றில் முதல் தடவையாக தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களுக்கான இப்தார் நிகழ்வு நேற்று (04.04.2024) வியாழக்கிழமை இரத்மலானையில் அமைந்துள்ள நீர் மற்றும் சுகாதாரத்திற்கான மேம்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம். நபீல், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உபதலைவர் சஞ்சீவ விஜயகோன், மேலதிக பொது முகாமையாளர் எம்.ரி.எம். ராஸில் மற்றும் அலுவலக அலுவலகத்தில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களுடன் மாற்று மத ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டுறவு தொடர்பாடல் பிரிவின் முகாமையாளர் சரத்சந்திர முத்துபண்டா வரவேற்புரை நிகழ்த்தினார். இரத்மலானை ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி முஹம்மத் ஹிபதுல்லா (பாரி) சிங்கள மொழியில் மார்க்க சொற்பொழிவுடன் துஆ பிரார்த்தனையும் நிகழ்த்தினார். அதனையடுத்து சபையின் உபதலைவர் சஞ்சீவ விஜயகோன் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக உதவிப் பொது முகாமையாளர் எம்.ரி.ஏ. பாவாவின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது. கூட்டுறவு தொடர்பாடல் பிரிவின் முகாமைத்துவ உதவியாளர் பிறவ்ஸ் முஹம்மட் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
(பேருவளை பி.எம். முக்தார்)