உள்நாடு

ஈரானில் நடைபெற்ற 31வது சர்வதேச குர்ஆன் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த கலைஞர் பங்கேற்பு..!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற 31வது சர்வதேச குர்ஆன் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த அரபு எழுத்தணிக் கலைஞர் அமீர் பைசல் அவர்கள் பங்கேற்றார்.
மார்ச் 18ம் திகதி முதல் 28ம் திகதி வரை நடைபெற்ற இக்கண்காட்சியில் இந்தியா, பாகிஸ்தான், துனிசியா, போஸ்னியா, ஹெர்சகோவினா, அல்ஜீரியா, இந்தோனேசியா, கென்யா, ஓமன், மலேசியா உட்பட 25 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் ஏற்பாடு செய்யப்படும் இக் கண்காட்சியில் குர்ஆன் வசனங்கள் மற்றும் போதனைகள் மற்றும் சில இஸ்லாமிய புத்தகங்களின் அரிய கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றைக் குறிக்கும் கலைப்படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டும்.
கலைஞர்கள் பயிலரங்குகளை நடத்தி தங்கள் கலைப்படைப்புகளை கண்காட்சியில் வைக்க வாய்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஏழு நாடுகளைச் சேர்ந்த கலாச்சார அமைச்சர்கள், உலக அளவில் பிரபலமடைந்த பல குர்ஆன் ஓதுபவர்கள், உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற அறிஞர்கள் இக் கண்காட்சிக்காக அழைக்கப்பட்டிருந்தனர். அதில் இலங்கை கொழும்பைச் சேர்ந்த அரபு எழுத்தனிக்களைஞர் அமீர் பைசல் அவர்கள் இலங்கைக்கான ஈரான் தூதரகத்தின் அலைப்பின்பேரில் பங்கேற்றார்.
(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *