உள்நாடு

மாவனல்லை திடீர் மரண விசாரணை அதிகாரியாக முஹம்மது மசூர் நியமனம்..!

கடுகண்ணாவையை பிறப்பிடமாகவும், மாவனல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட எம். ஆர். முஹம்மது மசூர் அவர்கள் மாவனல்லை நீதிமன்ற நீதிவான் கௌரவ டப்லியூ. ஏ. எஸ். அனுராத வீரக்கொடி முன்னிலையில் திடீர் மரணவிசாரனை அதிகாரியாக அண்மையில் பதவி ஏற்றக் கொண்டார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை இலுக்குவத்தை முஸ்லிம் வித்தியாலயத்திலும், சாதாரணதர கல்வியை கண்டி புனித சில்வஸ்டர் கல்லூரியிலும், உயர் தர கல்வியை மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் கற்று தேரினார். தனது பட்டப்படிப்பையும், மொழிப்பெயர்பாளர் கற்கைநெறியையும் பேராதனை பல்கலைகழகத்திலும் கற்றார்.
கண்டி அரசாங்க அதிபர் அலுவலகத்திலும் மற்றும், கண்டி பிரதேச செயலகத்திலும் 30 வருடங்களாக பணிபுரிந்த இவர் கடுகண்ணாவ இலுக்குவத்தையை சேர்ந்த காலஞ்சென்ர அல்ஹாஜ். எச். எல். எம். ரசீத் மற்றும் சித்தி ஹுசைனா ஆகியோரின் புதல்வரும் ஆவார்.

 

(மாவனல்லை செய்தியாளர் -பாரா தாஹிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *