விளையாட்டு

பிரேஸ்வெல் தலைமையில் பாகிஸ்தானை சந்திக்கும் நியூஸிலாந்துக் குழாம் அறிவிப்பு

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடருக்கான நியூநிலாந்து அணியின் 15 வீரர்கள் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தொடருக்கான நியூஸிலாந்து அணியின் புதிய தலைவராக சகலதுறை வீரர் மைக்கெல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் இம்மாதம் 18,20,21 மற்றும் 25, 27 ஆகிய திகதிகளில் ராவில்பிண்டி மற்றும் லாஹுர் மைதானங்களில் விளையாடவுள்ளது. இத் தொடருக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து குழாம் இன்று இந்நாட்டு கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத் தொடரில் நியூஸிலாந்தின் முன்னனி வீரர்களான கேன் வில்லியம்சன், ரிச்சின் ரவீந்திர, மிட்செல் சாண்ட்னெர், ரிடன்ட் போல்ட் , க்ளென் பிலிப்ஸ், மிச்சல் உள்ளிட்ட 9 நியூசிலாந்து வீரர்கள் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்று வருகின்றமையன் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான ரி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இத் தொடருக்கான நியூஸிலாந்து அணியின் தலைவராக சுழல்பந்து சகலதுறை வீரர் மைக்கெல் பிரேஸ்வெல் பெயரிடப்பட்டுள்ளார். இவர் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு நியூசிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் 21 வயது இளம் துடுப்பாட்ட வீரர் டிம் ரொபின்சன் இத் தொடரில் பங்கேற்பதன் மூலம் சர்வதேச அறிமுகத்தினைப் பெறவுள்ளார்.

அதேபோன்று 22 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் வில் ஓ ரூர்க் தனது அறிமுகத்தினை இத் தொடரில் மேற்கொள்ளவுள்ளார். மேலும் இத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் அனுபவ வீரர்களாக சுழற்பந்து வீச்சாளரான இஷ் சோதி, விக்கெட்காப்புத் துடுப்பாட்ட வீரர்களான டிம் செய்பர்ட், பின் ஆலென், சகலதுறை வீரரான ஜிம்மி நீஷம் ஆகியோர் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி விபரம்

மைக்கெல் பிரேஸ்வெல் (தலைவர்)
பின் ஆலென்
மார்க் சாம்ப்மென்
ஜோஷ் க்ளார்க்சென்
ஜேக்கப் டக்ப்பி
டீன் பாக்ஸ்க்ராப்ட்
பென் லிஸ்டர்
கோல் மெக்கன்சி
ஆடம் மில்னே
ஜிம்மி நீஷம்
வில் ஓ ரூர்க்
டிம் ரொபின்சன்
பென் சீயர்ஸ்
டிம் செய்பர்ட்
இஷ் சோதி

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *