உள்நாடு

கொழும்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் பாரியளவில் ஆசிரியர் , வளப் பற்றாக்குறை. உடன் நடவடிக்கை எடுக்க அர்ஷத் நிஸாம்தீன் வலியுறுத்து

கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளில் நீ்ண்ட காலமாக எதிர்நோக்கும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளில் பௌதீக வள குறைபாடுகள் பற்றி ஊடக சந்திப்பு நடைபெற்றது.மேல் மாகாணத்தின் முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பிணர் அர்சத் நிஜாமுதீன் நேற்று 02.04.2024 முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தினார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ”கொழும்பு மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் களுக்கு பாடசாலைகளில் பாரியளவில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அன்மையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பரீட்சை நடாத்தப்பட்டு 600 ஆசிரியர்கள் பரீட்சை எழுதினார்கள் அதில் 115 ஆசிரியர்கள் மட்டுமே சித்தியடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 20 பிரதி அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒர் பிரதி அதிபர் நியமிக்க 500 மாணவர்கள் அப்பாடசாலையில் இருத்தல் வேண்டும் எனக் கூறுகின்றனர் ஆனால் 300 மாணவர்கள் உள்ள் சிங்களமொழிப் பாடசாலைகளில் இரண்டு பிரதி அதிபர்கள் உள்ள பாடசாலையும் உண்டு ஆனால் தமிழ் மொழிப் பாடசாலைகளில் 600 -750க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் பிரதி அதிபர்கள் நியமிக்கப்படவில்லை.

இவ் விடயம் சம்பந்தமாக கடந்த வாரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணர் முஜிபுர் ரஹ்மானும் நானும் இனைந்து மேல்மாகாண ஆளுநர் மற்றும் பிரதிச் செயலாளர்கள் கல்வி அதிகாரிகளையும் சந்தித்து இவ்விடயங்கள் பற்றிப் பேசினோம். அத்துடன் எமது கொழும்பு வாழ் சிறுபான்மையினர் பாடசாலைகளில் ஆசிரியர் கோரிக்கைகளையும் முன்வைத்தோம். உதாரணமாக கொழும்பில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றில் 65 ஆசிரியர்கள் தேவையாக உள்ளது. ஆனால் அங்கு 35 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அத்துடன் அல் இக்பால் பாடசாலையில் அடிக்கல் மட்டத்தில் நடப்பட்ட கட்டிடம் மீள நிர்மாணிக்க முடியாமல் அத்திவாரத்துடன் உள்ளது மிகுதி நிதி இன்மையால் நிர்மாணம் பூரண்ப்படுத்தப்படவில்லை. கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நிதி நிலைமைகளினால் கடந்த 4 வருடங்களாக பாடாசலைகளில் எவ்வித அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை.

ஆகவே தான் கொழும்பில் வாழ்கின்ற உயர்தரம் சித்தியெய்திய 500 இளைஞர் யுவதிகளை தெரிவு செய்து பயிற்சி ஆசிரியர்களாக நியமித்து அவர்களுக்கு ஆசிரியப் பயிற்சியளிக்கும்படியும் நாங்கள் அரசாங்கத்தையும் ஜனாதிபதியும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள ஒர் முஸ்லிம் பாடசாலைகளில் பிரதி அதிபர்கள் நியமிக்குமபடியும் வேண்டிக் கொள்கின்றோம். கொழும்பில் உள்ள எந்த ஒரு பாடசாலையிலும் இஸ்லாம் பாட போதிக்கக் கூடிய மௌலவி ஆசிரியர்கள் இல்லை. அதனையும் கடந்த நல்லாட்சியில் பிரதமரக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அப்போது அவ் ஆசிரியர்களை நியமிப்பதாக சொல்லியிருந்தார் அதனையும் நியமிக்கும் படியும் கொழும்பு வாழ் சிறார்களின் கல்விக்கு புத்துயிர் அளிக்கும்படியும் அர்சத் நிசாமுடீன் அரசைக் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் சிறுபான்மையினர் கல்விக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.உதாரணமாக அம்பாறை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் சனத்தொகை போன்றே சமமான முஸ்லிம் சனத்தொகையினர் கொழும்பு மாவட்டத்திலும் வாழ்கின்றனர் ஆனால் அங்கு 12க்கும் மேற்பட்ட முஸ்லிம் தேசிய பாடசாலைகள் உள்ளன. ஆனால் கொழும்பில் இரண்டே இரண்டு தேசிய பாடசாலை உள்ள்து. கொழும்பு ஹமீத் அல் ஹுசைனியாவும், பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லுாாி மட்டுமே உள்ளது. கொலநாவை, வெல்லம்பிட்டி, தெஹிவளை, மொரட்டுவை வரையில் முஸ்லிம் சமூகத்திற்கு மேலும் மும்மொழிகளிலும் போதிக்கக் கூடிய ஆண், பெண் மேலும் இரண்டு தேசிய பாடசாலையாவது உருவாக்க வேண்டும்.

அதற்காக கொழும்பில் வாழ் முஸ்லிம் புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் இத்திட்டத்திற்கு முன் வருதல் வேண்டும். தற்பொழுது உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் இடப்பற்றாக்குறையும் பௌதீக பற்றாக்குறையும் உள்ளது. அத்துடன், கொழும்பில் உள்ள முஸ்லிம் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை 65வீதம் சிங்கள மொழி மூலம் போதிக்க அனுமதிக்கின்றனர். ஆகவே கூடுதலான சிங்கள மொழி ஆசிரியர்கள் கொழும்பில் தேவைப்பாடாக உள்ளது. எனவும் அர்சத் நிஜாமுத்தீன் வேண்டிக் கொண்டார்.

 

 

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *