பண்டிகைக் கால கொள்வனவுகளில் அவதானம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தல்..!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்கள் இப்போதிருந்தே தமக்குத் தேவையான பொருட்களை வியாபார நிலையங்களிலும் சந்தைகளிலும் கொள்வனவு செய்வதில் மக்கள் நுகர்வோர் ஆர்வம் காட்டிவருவதைக் காணமுடிகிறது.
இந்நிலைமைமையில் சில பொருட்கள் காலாவதியான (திகதி மாற்றப்பட்ட) பூச்சிகளால் பாதிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட பொருட்கள், இரசாயனம் கலந்த பொருட்கள் பொதுவாக தரமற்ற பொருட்கள் என்பன விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் மக்கள் அவற்றைக் கொள்வனவு செய்வதில் அவதானம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு வசதியாக அத்தியாவசியப் பொருட்கள் உட்பட ஏனைய சில பொருட்களின் விலைகள் என்பன சற்று குறைய ஆரம்பித்துள்ளன. இதனைப் பயன்படுத்தி வர்த்தக நிலையங்களிலும் சந்தைகளிலும் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தொடர்பாக மேலே குறிப்பிட்ட தரமற்ற பொருட்களை கொள்வனவு செய்வதிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு வர்த்தக நிலையங்களிலும் சந்தைகளிலும் சோதனைகளை நடத்திவருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையும் சுகாதார பரிசோதகர் சங்கமும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதுடன் அவ்வாறான தரமற்ற பொருட்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
அவ்வாறிருக்க பெண்கள் தமது சருமத்தைக் காக்கும் வகையில் சில அழகுசாதன பொருட்களில் கிறீம்வகைகளும் விற்பனை செய்யப்படுவதாகவும் அவைகள் உலக சுகாதார அமைப்பினால் தடைசெய்யப்பட்ட வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட இவைகள் புற்றுநோயுடன் சரும விதிகளும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதால் அவற்றைக் கொள்வனவு செய்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.
(ஏ.எம்.ஜலீல்)