உள்நாடு

கிழக்கின் கேடயத்தினால் கடினபந்து பயிற்சிக்  கூடாரம்..! அடிக்கல் வைத்து ஆரம்பித்து வைத்தார் எஸ்.எம். சபீஸ்..!

பாலமுனை இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அண்மையில் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக கடினபந்து கிரிக்கட் பயிற்சிக்  கூடாரத்துக்கான அடிக்கல்லை நாட்டி அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள்  தலைவரும், கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் இன்று ஆரம்பித்து வைத்தார்.
அடிக்கல்லை நட்டு வைத்து இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய சபீஸ், எமது இளைஞர்கள் எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியான போட்டிகளில் வாய்ப்புக்களை பெறவேண்டுமானால் எல்லா ஊர்களிலும் கடினபந்து கிரிக்கெட் விளையாடுவதற்கான தளங்களை உருவாக்க வேண்டும். பாடசாலைகள் மட்டத்திலான போட்டிகளை நடாத்தி புதிய திறமையான வீரர்களை எமது பகுதிகளிலும் உருவாக்க வழிவகை செய்ய வேண்டும் அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
இன்னும் சில வருடங்களிலாவது எமது பிராந்திய இளைஞர்கள் தேசிய அணியில் இடம்பிடிக்கும் வாய்புக்களை உருவாக்குவதற்கான சிறு முயற்சி மாத்திரமே இது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உலமாக்கள், கிழக்கின் கேடயம் பொருளாளர் ஏ.எல்.ருஸ்தி அஹ்மத், கிழக்கின் கேடயத்தின் இணைப்பாளர் சட்டக்கல்லூரி மாணவன் முஹம்மட் அசாம், ஏ.கே. அமீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், கிழக்கின் கேடயத்தின் ஆலோசகருமான சட்டமானி எஸ்.எம்.எம். ஹனீபா, செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.எம்.அர்சாத், அதிபர் எம்.எஸ்.எம். றியாஸ், ஏ.எல். றமீஸ், இளைஞர் அமைப்பின் தலைவர் முஹம்மது சீத், மற்றும் அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *