கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு..!
கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தது இந்த வீட்டு திட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் தமது மத கடமைகளை நிறைவேற்றுவதற்கு உருவாக்கப்பட்ட பள்ளிவாசலே முகைதீன் பள்ளிவாசலாகும். நீண்ட காலமாக முஸ்லிம் கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாமல் இருந்த இப் பள்ளிவாசலை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வருமான ரஹ்மத் மன்சூர் எடுத்துக் கொண்ட முயற்சியின் பலாபலனாக குறித்த பள்ளிவாசல் இலங்கை முஸ்லிம் கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது.
தற்போது புதிய கட்டட வசதிகளை பெற்றுள்ள இப்பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டமைக்கான ஆவணம் முகைதீன் பள்ளிவாசல் நிர்வாக சபையினரிடம் கையளிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில், பள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்கு உதவி செய்தவர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.