எந்த தேர்தலை முதலில் நடத்துவது ஜனாதிபதிக்கு நல்லது? – முபாறக் அப்துல் மஜீத்
2024ம் ஆண்டு தேர்தல் ஆண்டு என சொல்லப்படுகிறது. இதில் முதலாவதாக ஜனாதிபதி தேர்தலே நடக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்பு கூறுகிறது.
நாடு இன்றிருக்கும் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யார் வெல்வார் என்பதை எவராலும் சொல்ல முடியாதுள்ளது. இதனை நாடி பிடித்தறியாமல் ஜனாதிபதி தேர்தலுக்கு சென்று அதில் ரணில் தோற்றால் அதன் பின் வரும் பொதுத்தேர்தலில் ஐ தே க பாரிய தோல்வியை மீண்டும் பெறும்.
இந்த நிலையில் பொதுத்தேர்தலை முதலில் நடத்தினால் ஜனாதிபதி ஆதரவு தரப்புக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு எந்தளவுக்கு உள்ளது என்பதை அறிய முடியும்.
மட்டுமின்றி ஜனாதிபதியின் கட்சி என்பதால் ஐ தே க வும் கணிசமான எம் பீ க்களை பெறவும் உதவும்.
முன்கூட்டிய பொதுத்தேர்தலின் பின்னரும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே இருப்பார் என்பதால் பாராளுமன்றத்தில் தனக்கு சார்பான அரசாங்கத்தை கொண்டு வர முடியும். அதன் பின் ஜனாதிபதி தேர்தலில் ஓரளவு அரச பலத்துடன் முகம் கொடுக்க முடியும்.
ஆகவே ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதை விட பொதுத்தேர்தலை நடத்துவதே ஜனாதிபதி தரப்பு கட்சிகளுக்கு ஆரோக்கியமாக அமையும்.
முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
ஐக்கிய காங்கிரஸ் கட்சி
அவைத்தலைவர்
மனிதநேய மக்கள் கூட்டணி