மியாமி ஓபன் டென்னிஸ் தொடர். சம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்காவின் டேனியல்லோ கொல்லின்ஸ்
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் 7:5, 6:3 என்ற நேர் செட்களில் கஸகஸ்தான் வீராங்கனையான எலேனா ரைபாக்கினாவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தனதாக்கினார் அமெரிக்காவின் டேனியல்லோ கொல்லின்ஸ்.
உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் தொடர்களில் ஒன்றான மியாமி டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்றது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் இ ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் ஆகிய நான்கு பிரிவுகளாக இத் தொடர் இடம்பெற்று வருகின்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிப் போட்டியில் அலெக்ஸான்டரோவாவை 6:3 , 6:2 என்ற செட்களில் வீழ்த்தி அமெரிக்காவின் டேனியல்லோ கொல்லின்ஸ் இறுதிக்குள் நுழைந்தார்.
அடுத்து இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் அசரென்காவை 6:4, 0:6 மற்றும் 7:6 என போராடி வீழ்த்திய கஸகஸ்தானின் எலேனா ரைபாக்கினா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். அதற்கமைய இன்றைய தினம் தீர்மானமிக்க இறுதிப் போட்டி பார்க்கிங் என்ட் கெம்பஸ் மைதானத்தில் கஸகஸ்தானின் எலேனாரைபாக்கினா மற்றும் அமெரிக்காவின் டேனியல்லோ கொல்லின்ஸ் ஆகியோரிக்கிடையில் இடம்பெற்றது.
இப்போட்டியின் முதல் செட் ஆட்டத்தில் இரு வீராங்கனைகளும் தமது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டம் மிகுந்த விறுவிறுப்பை ஏற்படுத்த அனுபவமிக்க ஆட்டத்தால் 7:5என முதல் செட்டை தனதாக்கினார் அமெரிக்காவின் டேனியல்வோ கொல்லின்ஸ். பின்னர் இடம்பெற்ற தீர்க்காமன 2ஆவது செட்டில் ஆக்ரோஷமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனியல்லோ கொல்லின்ஸ் மிக இலகுவாக 6:3 என கைப்பற்றிக் கொள்ள மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் சம்பியன் பட்டம் 7:5, 6:3 என்ற நேர் செட்களில் 30 வயதான அமெரிக்காவின் டேனியல்லோ கொல்லின்ஸ் வசமானது.
(அரபாத் பஹர்தீன்)