உள்நாடு

அத்தனகலை பிரதேச மட்டப் போட்டிகளில் கஹட்டோவிட்ட பத்ரியாவுக்கு 5 பதக்கங்கள்

நேற்யை தினம் வதுப்பிட்டிவல மைதானத்தில் நடைபெற்ற அத்தனகலை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டிகளில் அல் பத்ரியா அணி 5 பதக்கங்களை வெற்றி கொண்டுள்ளது.

16 வயதின்கீழ் உயரம் பாய்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் அல்பதிரியா வெற்றி கொண்டது சிறப்பம்சமாகும். அந்த வகையில் முறையே ராஷித், ஆதிப், முஆத் ஆகிய மாணவர்கள் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொள்ள பரிதி எறிதல் போட்டியில் ரியாஜ் என்ற மாணவன் இரண்டாம் இடத்தையும், 16 வயதிற்கு மேற்பட்ட உயரம் பாய்தல் போட்டியில் மாணவன் மிஷால் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்.

மிக அண்மை காலத்தில் பாடசாலை ரீதியாக நடைபெற்ற போட்டிகளில் அல் பத்ரியா கலந்து கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

(அப்ஹம் நிசாம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *