உள்நாடு

கொழும்பில் அனுசரிக்கப்பட்ட பங்களாதேஷின் 53வது சுதந்திர தினம் மற்றும் தேசிய தினம்..!

இந்நிகழ்வில் உயர் ஸ்தானிகர் தாரீக் எம்.டி அரிபுல் இஸ்லாம் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தேசத் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், விடுதலைப் போரின் தியாகிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மரியாதை அனுஷ்டிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற திறந்த கலந்துரையாடலில், விடுதலைப் போரின் நாளின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு குறித்து பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர்.
அன்று மாலை, கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் உயர்ஸ்தானிகராலயத்தால் நடாத்தப்பட்ட வரவேற்பு நிகழ்வில் இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அவர் தனது உரையில், பங்களாதேஷ் மக்களுக்கு ஜனாதிபதி மற்றும் இலங்கை மக்களிடமிருந்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகள் குறித்தும் அவர் திருப்தி தெரிவித்தார். உயர் ஸ்தானிகர் தாரீக் தனது வரவேற்புரையில், பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான தனது தீர்மானத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர், கல்வி அமைச்சர், நீதி அமைச்சர், விவசாய அமைச்சர், மீன்பிடி அமைச்சர், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர், நீதி இராஜாங்க அமைச்சர், சட்டமா அதிபர், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, மற்றும் கடற்படைத் தளபதி உட்பட பெருந்தொகையான அதிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும், அமைச்சரவை அமைச்சர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், கொழும்பில் அமைந்துள்ள இராஜதந்திர தூதுவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், இராஜதந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், உயர் சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள், வர்த்தக தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பங்களாதேஷ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *