அசாத் சாலி பவுண்டேஷனினால் கொழும்பு மக்களுக்கு உலர் உணவு பொதிகள். சவூதி தூதுவரும் பங்கேற்பு
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பவுண்டேஷன் இம்முறையும் புனித நோன்பு காலத்திற்கான கொழும்பு வாழ் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் வைபவம் 27.03.2024 கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைக்கான சவூதி அரேபிய துாதுவர் காலித் பின் ஹம்மட் அல் கந்தானி அவர்களும் கலந்து கொண்டு சவுதி அரேபியாவின் ஈத்தம் பழங்களையும் கொழும்பு வாழ் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க துடன் கொழும்பு வாழ் முஸ்லிம் பெண்களின் நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
இந் நிகழ்வில் அசாத் சாலி பவுண்டேஷன் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் கொழும்பு வாழ் பெண்கள் ஒரு மாதத்திற்கு உலர் உணவுப் பொதிகளையும் அசாத் சாலி அவர்களினால் வழங்கிவைத்தமையும குறிப்பிடத்தக்கது.
(அஷ்ரப் ஏ.சமத்)