உள்நாடு

‘அரசாங்கம் வழங்கும் நிதியை பங்கிடுவது தலைவர்களின் பணியல்ல..’ -கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம்.சபீஸ்

புத்தாக்க சிந்தனைகளோடு சமூகத்தை வழிப்படுத்தி நெறிப்படுத்தி, மக்கள் தமக்கான வாழ்வாதாரங்களை சுயமாக தேடிக்கொள்ளும் வழிவகைகளை உருவாக்கிக் கொடுப்பதே தலைவர்களின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசாங்கம் வழங்குகின்ற நிதியை பங்கிடுவது சமூகத் தலைவர்களின் பணியல்ல என்று கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

கிழக்கின் கேடயம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் நேற்று அக்கரைப்பற்றிலுள்ள எம்.எஸ். லங்கா ( MS Lanka) கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்; கட்சிகளும் அவற்றுக்குக் கிடைக்கும் அதிகாரங்களும் மக்களை நின்மதியாகவும் மேம்பட்டவர்களாகவும் வாழவைப்பதற்காகவே இருக்க வேண்டும். ஆனால், மக்களிடம் இப்போது நிம்மதி இல்லை.
அரசாங்கம் தருகின்ற பணத்தை பிரித்துக் கொடுப்பதற்கு தலைவர்கள் தேவையில்லை. புத்தாக்க சிந்தனைகளோடு சமூகத்தை வழிப்படுத்தி நெறிப்படுத்தி மக்கள் தமக்கான வாழ்வாதாரங்களை சுயமாக தேடிக்கொள்ளும் நிலையை உருவாக்குவதே தலைவர்களின் கடமையாகும். இதனை தலைவர்கள் செய்யும் போதுதான் மக்கள் நிம்மதி நிம்மதியாக வாழ்வார்கள். ஆனால் அதனை இப்போது யார் செய்கின்றார்கள்? இந்தக் கேள்வி சமூகத்தில் உள்ள ஒவ்வொருத்தருக்கும் தோன்ற வேண்டும்.
காலாவதியான சிந்தனையாளர்களை தவிர்த்து விட்டு, தூரநோக்குள்ளவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்யவேண்டியது ஊடகவியலாளர்களின் கடமையாகும். சமூகத்தை வழிநடத்தகூடியவர்களை நாம் எல்லோரும் சேர்ந்து உருவாக்கவேண்டும்.
பிரச்சினைகளை பேசுபவர்களாக இல்லாமல் தீர்வுகளை கண்டுபிடித்து கூறுபவர்களாகவும், பிழைகளை மட்டும் கூறிக் கொண்டிருக்காமல், சரியானவற்றை அடையாளப்படுத்துபவர்களாகவும் நாங்கள் இருப்பதுபோன்று, இன்னும் பலரை உருவாக்குவதற்கு ஊடகவியலாளர்கள் பங்களிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *