அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு வலஸ்முல்ல வைத்தியசாலை குழுவினர் கள விஜயம்..!
வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலை குழுவினர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு (23) களவிஜயம் மேற்கொண்டிருந்தனர்.
வைத்திய அத்தியட்சகர் டொக்டர். ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் மற்றும் பொறுப்பு வைத்திய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர்கள் வரவேற்றனர். வைத்தியசாலை கழிவு முகாமைத்துவம் மற்றும் ஏனைய வைத்தியசாலை பிரிவுகளையும் வருகைதந்தோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இக் களவிஜயத்தில் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர். ஏ.பி.ஆர்.எஸ். சந்திரசேன மற்றும் வைத்திய நிபுணர்கள், மருத்துவ அதிகாரிகள், தாதி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட முகாமைத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சார்பில் பொறுப்பு வைத்திய அதிகாரிகளான டொக்டர்கள்.எம்.எம்.தாஸிம், எஸ். அகிலன், எம்.எச்.எம்.சனூபர், மற்றும் தாதிய பரிபாலகர் பி.ரி.நௌபர், நிருவாக உத்தியோகத்தர் கே.விஜயகுமார், கணக்காளர் பி. புனிதராஜ், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், இங்கு களவிஜயம் மேற்கொண்டோருக்கு வைத்திய அத்தியட்சகர் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன், இதன் போது கள விஜயத்தின் நினைவாக ஞாபகச்சின்னம் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
(சியாத்.எம்.இஸ்மாயில்)