பேருவளையில் இன நல்லிணன்னத்தை கட்டியெழுப்பும் மாபெரும் இப்தார்
பௌத்த, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய சமயப் பாடசாலை மாணவர்களிடையே புரிந்துணர்வையும் சமய நல்லிணக்கத்தையும் இன உறவையும் கட்டி எழுப்பும் நோக்கிலான இப்தார் நிகழ்வென்று பேருவளையில் இடம்பெற்றது.
களுத்துறை மாவட்ட அஹதியா சம்மேளன தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான எம்.எச்.எம்.உவைன் ஹாஜியாரின் ஏற்பாட்டில் சரித்திரப் பிரசித்தி பெற்ற கெச்சிமலை தர்ஹா வளவில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பேருவளை பிரதேச செயலாளர் பிரிவின் பேருவளை மொரகல்ல எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 8 பௌத்தஇ4 அகதியா, 2 கத்தோலிக்க சமயப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் மூன்று மதங்களையும் சேர்ந்த மத குருமார்கள், பேருவளை முன்னாள் உப நகர பிதா ஹஸன் பாஸி பிரதேச செயலாளர் ரன்ஜன் பெரேரா போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் பத்மகுமார உட்பட அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் வழிபாட்டுத் தலங்களின் முக்கியஸ்தர்கள் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள அதிகாரி அஷ்செய்க் முப்தி முர்ஸி பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஸம்ஸன் பவுண்டேசன் முக்கியஸ்தரும் பிரபல பேச்சாளருமான மௌலவி அம்ஹர் ஹக்கம்தீன் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டார். மொல்லியமலை ஹிழ்ரியா பள்ளிவாசல் கதீப் மௌலவி எம்.எஸ்.எம்.பாஸில் (அஷ்ரபி-அம்ஜதி) துஆப் பிரார்த்தனை புரிந்தார். இங்கு சுமார் 1000 பேருக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேருவளையில் இன உறவை கட்டியெழுப்பும் நோக்குடன் இரண்டாவது தடவையாகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தை சர்வமத தலைவர்கள் பெரிதும் பாராட்டி பேசினர்.பேருவளை முன்னாள் நகர சபை உறுப்பினர் அரூஸ் அஸாத் நன்றியுரை நிகழ்த்தினார்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)