விளையாட்டு

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் ஷகீப் அல் ஹசன்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான அணியை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் ஷகிப் அல் ஹசன் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் மிக இலகுவான வெற்றியைப் பதிவு செய்து தொடரில் 1:0 என முன்னிலை பெற்றுள்ளது. இப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் எவருமே பிரகாசித்திருக்க வில்லை. இந்நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2ஆவதும் இறுதயுமான டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டிருக்க அதில் சகலதுறை வீரரான ஷகீப் அல் ஹசன் உள்வாங்கப்பட்டுள்ளார்.

நட்சத்திர சகலதுறை வீரரான ஷகீப் கடைசியாக ஏப்ரல் 2023 இல் மிர்பூரில் அயர்லாந்தை சந்தித்தபோது ஒரு டெஸ்டில் விளையாடியிருந்தார். 2ஆவது போட்டியில் ஷகீப் அல் ஹசன் இணைக்கப்பட்டதால் முதல் போட்டியில் சோபிக்கத் தவறிய தவ்ஹித் ஹ்ரிடோய் 2ஆவது டெஸ்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் முஷ்பிக் ஹசன் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக சக வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் இணைக்கப்பட்டுள்ளார். மஹ்மூத் 16 முதல் தர போட்டிகளில் 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணி விபரம்

Najmul Hossain Shanto (Captain), Zakir Hasan, Mahmudul Hasan Joy, Shadman Islam, Litton Kumer Das, Mominul Haque Showrab, Shakib Al Hasan, Shahadat Hossain Dipu, Mehidy Hassan Miraz, Nayeem Hasan, Taijul Islam, Shoriful Islam, Syed Khaled Ahmed, Nahid Rana, Hasan Mahmud

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *